குல்ஸான் எபி
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை பள்ளிவாசல் கடந்த ஒரு மாதமாக தொல்பொருள் திணைக்களத்தினால் புரதாண சின்னமாக அடையாளப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
தொல்பொருள் திணைக்களத்தின் இந்த நடவடிக்கையினால் முஸ்லிம்களின் உரிமை மறுக்கப்பட்டு வந்ததுடன் அவா்களின் மாா்க்க கடமைகளை நிறைவேற்றுவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டது.
இப் பிரச்சினையை சம்மந்தப்பட்ட தரப்பினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமை தொடா்பு கொண்டு சம்பவ இடத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்று நிலமையை பார்வையிட்டனர்.
சம்பவ இடத்தை பாா்வையிட்ட அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்ட பிரதேசம் பல நுாற்றாண்டுகளாக முஸ்லிம்கள் தமது மாா்க்க கடமைகளை நிறைவேற்றி வந்துள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களம் இன ரீதியாக செயற்பட்டுள்ளதாகவும் கருத்துத் தெரிவித்தாா்.
அந்த அடிப்பமையில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையை பெற்றுக் கொடுக்கும் முகமாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையிலான துாதுக்குழு இன்று தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தோடு பேச்சுவார்த்தை நடாத்தியதுடன் சர்ச்சைக்குரிய பொத்தானை பள்ளிவாயலுக்குச் செல்வதற்கான தடை அகற்றப்பட்டுள்ளதோடு, அதற்கான தடை அறிவித்தல் பலகையையும் அகற்றுவதற்கு உடன்பாடு காணப்பட்டது.
இப் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்ததற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கும் அவருக்கு உறுதுணையாக செயற்பட்ட மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பொத்தானை பள்ளிவாசல் நிருவாக சபை தெரிவித்தது.