News Update :

Thursday, January 19, 2017

TamilLetter

பனிக்கட்டிகள் கரைந்தால் உலக வரைப்படத்தில் மலேசியா இருக்காது!



எரிபொருளுக்கு மாற்று வழி கண்டுபிடிக்கப்படும் வரை, புவி மேலும் மேலும் வெப்படைந்து   வட மற்றும் தென் துருவங்களில் பனிக்கட்டிகள் கரைந்து உலக வரைப்படத்திலிருந்து கோலாலம்பூர் காணாமல் போகலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 
புவி வெப்பமயமாதல் காரணமாக, பனிக்கட்டிகள் கரைந்தால் கடல் நீர் மட்டம் 216 அடி வரை அதிகரிக்கும் இதன் மூலம், புதிய உலக  வரைபடம் உருவாகும். 
தற்போது,  பூமிப் பரப்பளவில் 5 மில்லியன் பனிப்பாளங்கள் உள்ளன.   இன்னும் 5000 ஆண்டுகளில் அவையனைத்தும் கரைந்து விடும் அபாயத்தை பூமி எதிர்கொண்டுள்ளது. 
காற்றில் கார்பன் கலப்பது அதிகரித்தால்,  தற்போது 58-ஆக இருக்கும் வெப்ப நிலை 80 டிகிரி ஃபாரன்ஹெயிட்டாக அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. 
இவ்வாறு அனைத்துப் பனிக்கட்டிகளும் கரையுமானால், கோலாலம்பூர் உட்பட உலகிலுள்ள பல்வேறு தலைநகரங்களும் தண்ணீரில் மூழ்கிவிடும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-