ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடம் இன்று கூட உள்ளது. இரண்டாக பிளவடையும் அளவிற்கு கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களையும் நோக்கில் முக்கியமான அதி உயர்பீடக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமை பீடமான தாருஸலாமில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
|
நீண்ட காலமாக கட்சியில் நிலவி வந்த முரண்பாடுகள் இன்றைய கூட்டத்தில் களையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் அடுத்த பேராளர் மாநாடு எங்கு எப்போது நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளது. கட்சியின் யாப்பில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்து, பழைய யாப்பினையே மீளவும் அமுல்படுத்தல், கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தல், தற்போது தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.எச். சல்மானை நீக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக நடைபெற்ற கட்சியின் அதி உயர் பீட கூட்டத்தில் ஹசன் அலி பங்கேற்றிருக்கவில்லை எனவும், இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் அவர் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு அட்டாளைச்சேனையைச் சோ்ந்த கட்சியின் ஆறு உயர்பீட உறுப்பினர்கள் தமது பிரதேசத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டுமென போா்க்கொடி துாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
Sunday, January 1, 2017
இன்று முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடக் கூட்டம் ஜெயிக்கப்்போவது யார்?

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-