News Update :

Saturday, January 21, 2017

TamilLetter

பிரிமியர் லீக்: லிவர்புல்லுக்கு வெடிவைத்தது சுவான்ஸி!



இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில், கடைசி மூன்று இடங்களில் அல்லாடிக்கொண்டிருந்த சுவான்ஸி குழு 3-2 என்ற கோல்களில் வென்றதன் வழி, சாம்பியன் பட்டத்தை வெல்லும் லிவர்புல் குழுவின் ஆசைக்கு வெடிவைத்தது.
முற்பகுதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே கோலின்றி சமநிலையில் இருந்த வேளையில், பிற்பகுதி ஆட்டத்தின் போது சுவான்ஸி வீரர் லோரெண்டே 48ஆவது நிமிடத்திலும் 52ஆவது நிமிடத்திலும் கோலடித்து 2-0 என்ற கோல்கணக்கில் தனது குழுவை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.
எனினும், லிவர்புல்லின் முன்னணி வீரரான பிரேசிலைச் சேர்ந்த ஃபிர்மினோ அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு ஆட்டத்தை சமமாக்கி தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார். ஆனாலும், அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. 74 ஆவது நிமிடத்தில் சுவான்ஸியின் சிக்கார்ட்சன் ஒருகோலைப் போட்டு மீண்டும் குழுவை வெற்றிப்பாதைக்குக் கொண்டுவந்தார்.
ஆட்டத்தைச் சமமாக்க லிவர்புல் போராடியது என்றாலும் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனது. இதனால், அது தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மிகவும் பலவீனமான குழுவான சுவான்ஸியை வீழ்த்த முடியாமல் மூன்று புள்ளிகளை லிவர்புல் இழந்ததானது, அதன் பிரிமியர் லீக் கனவு கைநழுவும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்துவிட்டது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-