News Update :

Thursday, January 12, 2017

TamilLetter

தமிழக ஆட்சி கலைக்கப்படுமா?


உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் தமிழக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரிய உறுப்பினர் ஜெயசின்ஹா என்பவர் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நீதிமன்றத் தடையையும் மீறி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.  ஆகையால் தமிழகத்தில் அதிபர் ஆட்சியை பிரகடனம் செய்ய வேண்டும் என்று அவர் அவர் வலியுறுத்தி உள்ளார்.  
தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத் தடை காரணமாக, பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என தமிழகம் எங்கும் மக்கள் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. 
இந்தத் தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவோம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை கலைத்துவிட்டு அதிபர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கோரியிருந்தார்.
இந்நிலையில், விலங்குகள் நல வாரிய உறுப்பினரான ஜெயசிம்ஹா என்பவர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பி யுள்ளார். அதில் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் அதிபர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை  விடுத்துள்ளார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-