News Update :

Wednesday, January 18, 2017

TamilLetter

தாருஸ்ஸலாம் பற்றி தாறுமாறாய் எழுதும் மட்டக்களப்பு (மா)வித்துவானுக்கு...தவம் எழுதும்


(பாகம் – 01)
தேசியப்பட்டியல் கிடைத்து அனுபவிக்கும்போது தாருஸ்ஸலாம் பற்றி வாய் திறக்காத நீங்கள், தேசியப்பட்டியல் கிடைக்காதபோது பேசுவதினதும் புத்தகம் வெளியிடுவதினதும் மர்மத்தைப் புரிந்துகொள்ள முடியாதளவு மக்கள் ஒன்றும் மாக்கள் இல்லை.
ஹாபிஸ் நசிர் அஹமட் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் மீண்டும் கட்சிக்குள் வந்த போது தாருஸ்ஸலாம் பற்றிக் கூறியிருக்கலாமே அல்லது அவர் வந்ததிலிருந்து நீங்களும் அவரும் கட்சிக்குள் சுமார் மூன்று வருடங்கள் ஒன்றாக இருந்தபோது தாருஸ்ஸலாம் பற்றிக் கூறியிருக்கலாமே. கூறாதது ஏன்?
அப்போது நீங்கள் அதிகாரத்தில் இருந்தீர்கள். அதனால் பேச வேண்டிய தேவையில்லை. இப்போது தேசியப்பட்டியல் உங்களுக்கு கிடைக்கவில்லை. அதிகாரம் உங்களுக்கு இல்லை. அதனால் எழுதுகிறீர்கள். இந்த “சிம்பிள் லாஜிக்கைக்” கூட விளங்க முடியாதளவுக்கு மக்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என்று நீங்கள் எண்ணிக்கொள்வது கவலை தருகிறது.
“ஹாபிஸ் நசிர் அஹமட்டிடம் மாட்டிய தாருஸ்ஸலாம் உங்களிடம் மாட்டியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இந்நேரம் பிரிச்சி விற்றிருப்பீர்களாம். கட்டிடமும் காணியும் இருந்த இடமே இல்லாமல் போயிருக்குமாம். அல்லாஹ் காப்பாற்றினான். அப்படி விற்றதற்குக் கூட ஒரு கதையைச் சொல்லி இருப்பீர்களாம், கட்சிக்குத் தெரியாமல் கள்ளத்தனமாக அமைச்சர் எடுத்து விட்டுச் சொல்லிய கதையைப் போல”. இப்படி மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இது காதுகளுக்கு விழவில்லை போலும். ஓகே, உங்கள் வழிக்கே வருகிறோம். யுனிட்டி பில்டர்ஸ் கம்பனிக்கு என்ன சொத்திருக்கிறது ஹாபிஸ் நசிர் அஹமட்டும் றஊப் ஹக்கீமும் அனுபவிக்க? அதன் பேரில் தாருஸ்ஸலாம் கட்டிடமோ அல்லது அதனோடு சேர்ந்த வெற்று நிலமோ இருக்கிறதா? இல்லையே. இதைப் பற்றி ஏன் கூறவில்லை? கூற மாட்டீர்கள். ஏனென்றால் அதை கூறினால் உங்களது வஞ்சக நோக்கத்தை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.
யுனிட்டி பில்டர்ஸ் கம்பனி என்பது வெறும் டம்மி பீஸ். பராமரிப்புக்காக உருவாக்கப்பட்ட வெறும் வெற்றுவேட்டு. தண்ணி பில்லும் கரண்டு பில்லும் கட்டுவதற்கு உருவாக்கப்பட்ட சம்பளம் இல்லாத உயிரற்ற ஊழியன். இன்னும் விபரமாகக் கூறினால் உங்களில் யாரிலும் நம்பிக்கை இல்லாமல் தலைவர் அஷ்ரப் உண்டாக்கிய நம்பிக்கைக்குரிய விசுவாசி.
இப்படி ஒன்றுமில்லாத ஒன்றை ஊதிப் பெருப்பித்து கட்சிக்கும் தலைமைக்கும் மக்களிடம் களங்கம் விளைவிக்கும் மட்டக்களப்பு மாவித்துவானே! உங்கள் ஆசைகள் நிறைவேறி ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். ஆனால், அதற்காக முஸ்லிம் தேசியத்தின் ஆன்மா அஷ்ரப்பின் பேரைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கேவலமான மரணத்தின் பிடியை நீங்களாக வலிந்து அழைக்க வேண்டாம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-