மு க் ஷித் அகமட்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு தினமும் புதிய புதிய பிரச்சினைகள் தொடர்பான செய்திகளே வந்து கொண்டிக்கின்றன.
அதே போல் தற்போது பல இலட்சம் ரூபா செலவில் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ள தாறுஸ்ஸலாம் தொடர்பான புத்தகம் எல்லோருடைய வீடுகளுக்கும் முகவரியிட்டு வந்துள்ளது.
எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து பங்கிட்டவர்களின் கதைக் கருவில் திரைக்கதையாக மாறியுள்ள இப் படைப்பின் தயாரிப்பு பொறுப்பை ஒரு அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வடிவேல் சொல்வது போல் அந்த விடயம் போன கிழமையாகிவிட்டது இந்த வாரம் சல்மான் தேசியப்பட்டியல் எம்.பி பதவியில் இருந்து விலகமாட்டார் எனும் ஒரு செய்தி புதிய தகவலாக இருந்தாலும் கட்சிக்கும் மக்களுக்கும் இது பழைய செய்தியாகவே உள்ளது.எனென்றால் தனக்கு நம்பிக்கையுடையவர்களுக்குத்தான் தேசியப்பட்டியல் என்று கூறி தலைவர் வழங்கிய அணைதது தேசியப்பட்டியலும் இப்படித்தான் மறுக்கப்பட்ட கதையாகி போய்விட்டது.;
அதே போன்றுதான் தலைவரின் பிடிக்குள் இருந்து சல்மான் நழுவிக் கொண்டிருப்பதை ஹஸனலியால் நன்கு உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை இப்படிச் சொல்கிறாரோ? தவிசாளரிடம் இருக்கும் பைல்போல் சல்மானிடம் இருக்குமோ என்னவோ
அட்டாளைச்சேனைக்கு எம்.பி பதவி வழங்குவதை தான் ஒரு போதும் எதிர்க்கவில்லை.சல்மானிடம் சுமார் இரண்டு வருடங்களாக ; இப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இருந்து வரும் வேளையில் இப் பதவியை அட்டாளைச்சேனைக்கு வழங்காமல் தனிநபர் ஒருத்தர் வைத்திருப்பது நியாயமா எனும் கேள்வி என்னுள் எழுந்தது இருந்த போதும் அட்டாளைச்சேனை மக்கள் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளமால் இருந்து வந்ததுடன் அதற்கு பரிகாரமாக அட்டாளைச்சேனை மத்திய குழுவின் கோரிக்கைக்கு அமைவாக மாகாண அமைச்சையும்; அட்டாளைச்சேனை பெற்றுக் கொண்டது.
மேலும் இன்று சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் வெறுமென சல்மானிடம் இருக்கும் எம்.பியை நான் பெறுவதன் மூலம் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் காணிகள்,கரையோர மாவட்டம் என்பன தொடர்பாக என்னால் இச்சந்தர்ப்பத்தில் சம்மந்தப்பட்ட தரப்புகளோடு பேச முடியும் என்பதனால்தான் எம.பியை பெற சம்மதித்தேன்.
சல்மானிடம் உள்ள தேசியப்பட்டியல் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் ஏன் அடுத்த தேர்தல் வரை சென்றாலும் அட்டாளைச்சேனை மக்களுக்கு கவலையில்லை ஆனால் நான் அந்த தேசியப்பட்டியலை பெறுவதுதான் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினை
இன்று தேசியப்பட்டியல் தேவையில்லை என்று என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியும் ஆனால் அட்டாளைச்சேனைக்கு ஓரு வாரத்துக்குள் அதை வழங்க முடியுமா? அந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற பதவியை உங்களால் பெற முடியுமா? என நான் அவர்களைப் பார்த்து கேட்கின்றேன்.
இது தொடர்பாக அட்டாளைச்சேனை அணைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவரோடு பேசுவதற்கும் தயாராகவுள்ளேன்.
எனவே யாரிடமோ பிடிக்க வேண்டிய சண்டையை என்னிடம் பிடிப்பதை விட்டு விடுங்கள்