News Update :

Sunday, January 15, 2017

TamilLetter

காவல்துறையினர் மீது தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்..!!



கல்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவில் காவல்துறை அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பத்தலங்குண்டுவ காவல்துறை சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை ஒன்றுக்காக வீடொன்றை நோக்கி சென்ற தருணத்தில் வீட்டில் இருந்தவர்களால் காவல்துறை அதிகாரிகள் இருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் காரணமாக பலத்த காயமடைந்த இருவரும் கடற்படை அதிகாரிகளால் கல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது கவலைக்கிடமான நிலையில் இருந்த ஒருவர் மேலதிக சிகிச்கைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கல்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-