News Update :

Monday, January 9, 2017

TamilLetter

தனி அறையில், இருட்டில் வாழ்ந்த ரஜினி- மகள் ஐஸ்வர்யா தகவல்



பெரிய நட்சத்திரங்களின் வாழ்வில் சில விசயங்கள் நமக்கு பிரமிப்பாய் இருக்கும். சில விசயங்கள் அசாத்தியமாய் தெரியும். ஆனால் சில விசயங்களோ புரியாத புதிராகவே இருக்கும். அப்படி தான் ரஜினியின் வாழ்க்கையும். சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா தனுஷ், தனது வாழ்க்கை சுயசரிதை புத்தகத்தில் இதனைப் பற்றி கூறியுள்ளார். 
ஐஸ்வர்யா தனது 34 வருட வாழ்க்கையைச் சுயசரிதையாக எழுதி அதனைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். 'ஸ்டேண்டிங் ஆன் ஆப்பிள் பாக்ஸ்' என்ற அந்த புத்தகத்தில் தனது விபரங்கள், சந்தித்த ஏமாற்றங்கள், தனுசுடனான காதல் ஆகியவற்றோடு தந்தை ரஜினிகாந்த் உடனான மறக்க முடியா நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒன்று தான் ரஜினியின் தனி அறை படலம். ரஜினி, தினமும் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய பின், வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்று விடுவாராம். அந்த அறைக்குள் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. அந்த அறையில் நான்கு புறமும் கண்ணாடி மட்டுமே பதிக்கப்பட்டிருக்கும். அங்கு ஒரு மெழுவர்த்தி வெளிச்சத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பாராம்.
இதுபற்றி, ஐஸ்வர்யா ரஜினியிடம் கேட்டப்போது, "என்னோட கனவுகள் ரொம்ப பெருசு மா. கஷடப்பட்டு பணம், புகழ் எல்லாம் சேர்த்து மேல வந்துட்டேன். ஆனால், திரும்பி பார்க்கும்போது நான் தனியா நிக்கிறேன். மனித இயல்புகளையும் புரிஞ்சிட்டேன். யார்கிட்டையும் மனம் விட்டு பேச முடியவில்லை. 
அதனால் தான், இந்த தனிமையை நானே ஏற்படுத்திக்கிட்டேன். தினமும் அந்த அறையின் கண்ணாடி முன்னால் நின்று என்னோடு நானே பேசிக்குவேன். ஒவ்வொரு கண்ணாடியிலும் ஒவ்வொரு ரஜினி நிப்பாங்க. அவங்களோட நான் பேசிவேன்" என்று கூறினாராம்.
அதேபோல, ரஜினியின் ஆன்மீக ஈடுப்பாட்டுக்கு அடித்தளம் இட்ட ஒரு கதையையும் ஐஸ்வர்யா கூறினார். அதாவது, ரஜினிக்கு 11 வயதும் இருக்கும்போது, அப்போது ரஜினி வாழ்ந்த ஊருக்கு அருகில் உள்ள மலையில் ஒருநாள் உடைகள் காயப்போட்டிருந்ததைப் பார்த்துள்ளார் ரஜினி. உடனே மலையேறி சென்றுள்ளார் அவர். அங்கு சாமியார் ஒருவர் இருந்துள்ளார்.
அதோடு, ரஜினியை அருகில் அழைத்து அவர் நெற்றியில் திருநீறு பூசியுள்ளார், அங்கிருந்து கிளம்பிய ரஜினி, மறுநாள் சென்று அங்கு சென்று பார்க்கையில் சாமியார் வந்து சென்ற அடையாளம் எதுவும் இல்லையாம். இது தான் ரஜினியின் ஆன்மீக பயணத்தை தொடங்கி வைத்த சம்பவமாம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-