News Update :

Friday, January 13, 2017

TamilLetter

அம்பாரை கரையோர பிரதேசங்களில் தரம் ஒன்று மாணவா்களிடம் பணம் அறவீடு



செந்தில் நாதன்
தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்களை முறையற்ற விதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் கிடைபெற்ற பாடசாலைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பழைய மாணவர் சங்கத்தினாலேயே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரோயல் கல்லூரியில் மாணவர்கள் இணைப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. எனினும் முறையான விதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் திங்கட்கிழமை முதல் ரோயல் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அத்தோடு அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களைச் சோ்ந்த  சில  பாடசாலைகள் பழைய மாணவா்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு என்ற பெயரில் மாணவா்களிடம் பணம் பெற்றது தொடா்பாக சமூகவியலாளர்களும் சமூக அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் இதுவிடயமாக பணம் பெற்றதற்கான பற்றுச் சீட்டு பெற்றோா்களின் வாக்குமூலம் என்பன இரகசியமான முறையில் பதிவு செய்யப்பட்டு    வருவதாகவும் சொல்லப்படுகிறது.
குற்றம் நிரூவிக்கப்பட்டால் அதிபர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-