News Update :

Thursday, January 26, 2017

TamilLetter

காதலிக்க மறுத்ததால் மாணவியை பிளேடினால் கழுத்தறுத்துக் கொன்றான்!



தன்னைக் காதலிக்க மறுத்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவரை பிளேடினால் கழுத்தை அறுத்துக் கொன்றான் இளைஞன். நாகர்கோவில் அருகே நடந்துள்ள இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பில் ஒரு கட்டடத் தொழிலாளியான அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவிலை அடுத்த தாழக்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அப்பகுதியில் கட்டட வேலை செய்து வரும் மகேஷ் என்ற இளைஞன் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். 
ஆனால், மகேஷை காதலிக்க மாணவி மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது அவரை மகேஷ் தனது நண்பர்களுடன் வந்து வழி மறித்துள்ளான்.
பின்னர் மாணவியிடம் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளான். இதற்கு அந்த மாணவி மீண்டும் மறுக்கவே ஆத்திரமடைந்த மகேஷ் தான் மறைத்து வைத்திருந்த பிளேடினால் மாணவியின் கைகள் மற்றும் கழுத்தில் அறுத்துள்ளான்.
இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவி, கத்திக் கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதை அடுத்து மகேஷ் தனது நண்பர்களுடன் தலைமறைவானான். 
இதையடுத்து மாணவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி மாணவி பிளேடினால் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-