News Update :

Wednesday, January 25, 2017

TamilLetter

அரிசியா திருடுறே? இந்தா தண்டனை- எலி கழுத்தில் திருடன் பட்டம்




மனுஷனோ மிருகமோ  திருட்டு திருட்டு தான் தண்டனை தண்டனை தான் என்று நாட்டாமை கணக்கில், எலிக்கு தண்டனை வழங்கியுள்ளனர் சீன நாட்டவர்கள். கிடங்கில் இருந்த அரிசியைத் 'திருடி' தின்ற எலியைப் பிடித்து அதன் கழுத்தில் 'நான் திருடன்' என அட்டை ஒன்றையும் மாட்டிவிட்டுள்ளனர்.
சீனாவில் இருக்கிறது ஹெயுவான் நகர். இங்கு ஒரு மளிகை கடை கிடங்கில் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் அரிசி மூட்டைகளும் இருந்தன. கொஞ்ச நாட்களாக மூட்டையில் பெரிய துளைகள் போடப்படுவதைக் கண்ட கடை ஊழியர்கள் 'திருடனுக்காக' காத்திருந்தனர். ஒருவழியாக ஊழியர்களிடம் சிக்கியது திருட்டு எலி.
எலியைப் பிடித்த ஊழியர்கள் "நான் திருடன், இனி திருட மாட்டேன்" என்ற அட்டையை மாட்டி, அதன் கை, கால்களில் கயிறு கட்டி தொங்கவிட்டுள்ளனர். அதனை படமெடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் ஷாங் எனும் நபர். உடனே இதனைப் பகிர்ந்து 'தொங்கவிடப்பட்ட' எலியைப் பிரபலமாக்கி விட்டனர் நெட்டிசன்கள்.
எலியைப் பிடித்த ஊழியர்கள் அதனைக் கொல்ல மனமில்லாமல், விளையாட்டுக்காக இவ்வாறு செய்து படமெடுத்து பின்னர் வெளியே விட்டு விட்டதாக ஷாங் கூறியிருந்தார். ஆனால், பலர் இது கொடூரமான செயல், இதனால் அந்த எலி இறந்திருக்கக்கூடும் என கண்டனம் தெரிவித்திருந்தனர்.
எது எப்படியோ யாராக இருந்தாலும், திருடினால் இதுபோன்ற அவமானங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை இந்த எலி உலகுக்கு சுட்டிக் காட்டியுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-