News Update :

Sunday, January 8, 2017

TamilLetter

கலப்பு நீதிமன்ற பரிந்துரை - ஜெனிவாவில் விவாதம்!




நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனை செயலணியால் முன்வைக்கப்பட்டுள்ள, கலப்பு நீதிமன்ற பரிந்துரை குறித்து, ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலப்பு நீதிமன்றத்தை அமைத்து மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. இதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கவில்லை. இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட செயலணி ஒன்று கலப்பு நீதிமன்ற விசாரணையைப் பரிந்துரைத்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் ஐ.நா கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-