கனடா, கியூபெக் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றினுள் நுழைந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து குறித்தப் பகுதியில் பதற்றநிலை தொடர்வதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.