News Update :

Tuesday, January 31, 2017

TamilLetter

முஸ்லிம்களுக்கெதிரான கொடூர தாக்குதல்கள்: விசாரணையை ஒத்திவைத்தது அரசு




 முஸ்லிம்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரனை அறிக்கை வெளியீட்டை ஒத்தி வைப்பதற்கு அந்நாட்டு தலைவர் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளது.
மியன்மாரில் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்குட்பட்டு வந்த ரொஹிங்கியோ முஸ்லிம் மக்களுக்கு தீர்வினை ஏற்படுத்தி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறைப்பாடுகளுக்கெதிராக விசாரணை குழு ஒன்றை நியமித்து அது பற்றிய அறிக்கையை சமர்க்கும்படி அந்நாட்டு தலைவர் ஆன்சாங் சூகி தெரிவித்திருந்தார்.
சிறுபான்மை இனத்தவர்களான ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த பிராந்தியத்திலிருந்து வெளியேறுவதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள்.
மேற்குறித்த குற்றங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள புதிய கருத்துக்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே மேற்படி கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச தரப்பு தெரிவித்துள்ளதாகவும், உண்மையில் அந்நாட்டு தலைவர் அறிக்கை குறிப்புகளை திருத்துவதற்காகவே அறிக்கை சமர்பிப்பு தினத்தை ஒத்தி வைத்துள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மியன்மாரின் முன்னால் இராணுவ தளபதியை தலைவராக கொண்டியங்கும் குறித்த விசாரணை ஆணைக்குழுவானது பாரபட்சமாக செயற்படுவததாகவும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள படையினரை விடுதலை செய்வதற்கான சாத்தியங்களை உருவாக்கி வருவதாக அந்நாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-