News Update :

Wednesday, January 11, 2017

TamilLetter

ஹஸனலியிடமிருந்து நழுவி அட்டாளைச்சேனைக்கு கைமாறும் தேசியப்பட்டியல்?



குல்ஸான் எபி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு நாளுக்கு நாள் அதிக நெருக்கடிகளைக் கொடுத்துவரும் தேசியப்பட்டியல் விவகாரத்தில் சில திருப்புமுனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக நம்பப்படுகின்றது.

இது தொடர்பாக இன்று காலை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அரசியல் சாராத கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் ஒரு உயர் பதவியிலிருக்கும் நபரிடம் தொலை பேசியில் எம்.பி தொடர்பாக பேசிவிட்டு அட்டாளைச்சேனையில் யாருக்கு வழங்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

தலைவரின் கேள்விக்கு பதிலளித்த அந்நபர் அட்டாளைச்சேனையில் யாருக்கு அதிகமான மக்கள் செல்வாக்கு உள்ளதோ அவருக்கு எம்.பியை வழங்குவதுதான் சிறந்தது என பதிலளித்துவிட்டு யாருக்கு வழங்குவதாகயிருந்தாலும் இதன்; மூலம் அம்பாரை மாவட்டத்திலுள்ள இன்னும் சில பிரதேசங்கள்; இதனால் நன்மையடையுமா? என்பதையும் முக்கியமாக  கவனிக்க வேண்டும் என்றும் அவரால் ஆலோசனையும் வழங்கப்பட்டது.   ;.

ஹஸனலி எனும் தனி மனிதரை திருப்திப்படுத்துவதை விட்டுவிட்டு மக்களை திருப்திப்படுத்தும் தீர்மானங்கள்தான் கட்சியின் எதிர்கால நடவடிக்கைக்கு வழிகோலும்  என்பதை தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்  அதனால்     .
 அட்டாளைச்சேனைக்கு எம்.பி வழங்குவதற்கான வாய்ப்புகள்  அதிகமாக காணப்படுவதாக நம்பப்படுகின்றது.

அத்தோடு   நேற்றிரவு ஒன்று கூடிய ஹஸனலியின் குடும்ப உறவுகள் தேசியப்பட்டியல் எம்.பியை எடுக்க வேண்டாம் என்று ஹஸனலிக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அதனை அட்டாளைச்சேனைக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாகவும் ஹஸனலியோடு தொடர்புபட்டவர்கள் தழிழ் லெட்டர் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தனர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-