News Update :

Thursday, January 26, 2017

TamilLetter

பிரதி அமைச்சர் பைசால் காசீம் மக்களை ஏமாற்றுகிறார்-மீனவா்கள் ஆவேசம்



(அகமட் எஸ்.முகைடீன்)

அம்பாறை மாவட்ட மீனவர்களின் துயரங்களில் பங்கேற்காதுமீனவர்கள் மீது அக்கறையுள்ளவர் போன்று தன்னைஊடகங்கள் வாயிலாக காட்டமுனையும் சுகாதார பிரதிஅமைச்சர் பைசால் காசீம்இ பிரதி அமைச்சர் ஹரீஸின்செயற்பாடுகளுக்கு அவர் உரிமை கோருவது எந்த வகையில்நியாயம் என அம்பாறை மாவட்ட ஆள்கடல் மீனவ மற்றும்இயந்திரப் படகுகள் சங்கத் தலைவர் எம்.எம்.நசீர் கேள்விஎழுப்பியுள்ளார்.

ஒலுவில் துறைமுகத்தில் படகுகள் செல்லும் பாதையில்நிரப்பியுள்ள மண்ணை அகற்றும் பணிக்கு பிரதி அமைச்சர்பைசால் காசீம் நிதி அமைச்சினூடாக 40 லட்சம் ரூபாநிதியினை பெற்றுத்தந்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்தசெய்திக்கு மறுப்பு தெரிவிக்கையிலேயே மீனவ சங்கதலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்இ

ஒலுவில் துறைமுகத்தில் கடந்த சில மாதங்களாக படகுகள்செல்லும் பாதையில் மண் நிரப்பிக்காணப்பட்டது. இதனால்மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு மீனவர்கள்பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்தனர்.

இவ்விடயம்; தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகள்அமைச்சர் ஹக்கீம்இ பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்இபைசால் காசீம் ஆகியோரின் கவனத்திற்கு; கொண்டுவந்தனர்.

இதனை கவனத்திலெடுத்த பிரதி அமைச்சர் ஹரீஸ்இஅமைச்சர் ஹக்கீமின் வழிகாட்டலில் அவசரமாகசெயற்பட்டு மண் அகழும் கப்பலினை ஒலுவில்துறைமுகத்திற்கு கொண்டு வந்து துறைமுகத்திலுள்ளமண்ணை அகற்றும் பணியினை ஆரம்பித்து வைத்தார்.இப்பணிக்காக 40 லட்சம் ரூபா நிதியினை அமைச்சிலிருந்துபெற்றும் தந்துள்ளதுடன் அவரின் சொந்த நிதியினையும்இதற்காக செலவு செய்துள்ளார்.

மேலும் கடலுக்கு சென்ற மீனவர்களை தேடிக்கண்டுபிடிப்பதற்காக மாலைதீவு வரை சென்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பிரதி அமைச்சர் ஹரீஸ்அவர்களை மீட்டுத்தந்துள்ளார். இதனையிட்டு அம்பாறைமாவட்ட மீனவ சமூகம் பிரதி அமைச்சருக்குகடமைப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக பிரதி அமைச்சர் ஹரீஸ்இ மீனவர்கள்எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டுஅதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு கடற்றொழில்அமைச்சரை அழைத்து வந்து மீனவர்களுக்கு மீன்பிடிஉபகரணங்கள் வழங்குவதற்குவதற்கு நடவடிக்கைஎடுத்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால்காசீன் மீனவர்களின் துயரில் பங்கெடுக்காது பொடுபோக்காகஇருந்துவிட்டு தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக இன்று பிரதி அமைச்சர் ஹரீஸ் மீனவர்கள்தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள்வாயிலாக பதிவு வைக்க முனைந்துள்ளமையையிட்டுகவலையடைவதோடு இந்நடவடிக்கையினைகண்டிக்கின்றோம்.

மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப்பின் தூரநோக்குசிந்தனையில் ஒலுவில் துறைமுகம் உருவாக்கப்பட்டது.அண்மையில் ஏற்பட்ட  ஒலுவில் கடல் அரிப்புக்காக இதனைதடுப்பதற்கு மாற்றுத் தீர்வை பற்றி சிந்திக்காது பிரதிஅமைச்சர் பைசால் காசீம்இ இத்துறைமுகம் சாத்தியமற்றதுஇதனை மூடிவிட வேண்டும் என அம்பாறை மாவட்டமீனவர்களின் தொழிலில் கைவைக்கும் அளவுக்குசெயற்பட்டுள்ளார்.

அண்மைக் காலமாக அம்பாறை மாவட்ட மீனவர்கள்பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இதனை பிரதி அமைச்சர் பைசால் காசீம் இன்று வரைகண்டுகொள்ளாமல் இருப்பதையிட்டு மீனவ சமூம்கவலையடைவாகவும் அவர் தெரிவித்தார்.




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-