பாலமுனை சஜா
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட பாலமுனையைச் சோ்ந்த 22 குடும்பங்களுக்கான காணி உதிரிப்பத்திரங்கள் இன்று (07) வைபவரீதயாக வழங்கி வைக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு உரிய பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தனர்..
வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்ட போதிலும் அதற்கான காணி உதிரிப்பத்திரங்கள் இதுவரை காலமும் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு நிருவாக சிக்கலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.