News Update :

Sunday, January 22, 2017

TamilLetter

முதலமைச்சர் நஸீர் அகமட் என்னை ஏமாற்றி விட்டார்-அமைச்சா் ஹக்கீம் கவலை




எஸ்.எல்.   றிஸ்லி


தாருஸ்ஸலாமில் மறைக்கப்பட்ட மர்மங்கள்' என்ற புத்தகத்தில் வெளிவந்துள்ள விடயங்கள் ஹசனலியின் மூலமே வெளிவந்துள்ளதாக கட்சிக்குள்  பரபரப்பாக பேசப்பட்டு  வரும்  நிலையில் இது தொடா்பாக கட்சியின் முக்கியஸ்தர்களுடன் அமைச்சா் ரவுப் ஹக்கீம் முக்கிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார் .

அந்த வகையில் அம்பாரை மாவட்டத்தைச் சோ்ந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும்    பெயர் குறிப்பிட விரும்பாத ஒருத்தரை அழைத்து தன் பக்க நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளார்.

மக்கள் முன் என்னை  இழிவு படுத்தி கட்சியின் அதிகாரங்களை கைப்பற்றவே இப்படியான சதித்திட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாகவும் அதற்காகவே இப் புத்தகத்தை வெளியிட்டதாகவும் தலைவா் ரவுப் ஹக்கீம்  குறிப்பட்ட பிரமுகரிடம் தெரிவித்தார்

அத்தோடு முதலமைச்சர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தொடா்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் முதலமைச்சரின் மருமகனை (தாறுஸலாமின் யுனிட்டி பில்டன் கம்பனியின் பணிப்பாளராக    நியமித்து விட்டு  அந்த விடயத்தை முதலமைச்சர் தன்னிடம் மறைத்து வந்துள்ளதாகவும் தற்போதுதான் இந்த விடயம் தமக்கு தெரிய வந்துள்ளதென   தலைவா் ஹக்கீம் கவலை தெரிவித்ததாக முஸ்லிம் காங்கிரஸின்  மூத்த முக்கிய பிரமுகர் தமிழ் லெட்டருக்கு  தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-