News Update :

Friday, January 6, 2017

TamilLetter

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பதில் செயலாளர் பக்கச் சார்பாக செயல்படுகின்றார்.





(எம்.எச்.எம்.கியாஸ்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும் தற்காலிக மற்றும் பதில் கடமையாற்றும் ஊழியர்களின் வேலை நாட்களை 12 நாட்களுக்குள் மட்டுப்படுத்தியுள்ளதுடன் சிலருக்கு மட்டும் மாதத்தில் 26 நாட்களையும் வழங்கி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பதில் செயலாளர் பக்கச் சார்பாக செயற்பட்டு வருவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நூலக உதவியாளர்களாகவும், வீதித் தொழிலாளர்களாகவும், சுகாதாரத் தொழிலாளர்களாகவும் பலரும் தற்காலிகமாகவும், பதிலீட்டு அடிப்படையிலும் கடமையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரின் சிபார்சின் அடிப்படையிலும் பல ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்தனர். தற்போது சில ஊழியர்களுக்கு மட்டும் 12 நாட்களாக வேலை நாட்களை மட்டுப்படுத்தியுள்ளதுடன் தனக்கும், தனது எஜமானர்களின் விருப்பத்திற்காகவும் சிலரை மாதத்தில் 26 நாட்கள் வேலை செய்வதற்கும் பிரதேச சபையின் செயலாளர் பணித்துள்ளார்.

சாதாரண அரசாங்க ஊழியர்களுக்கு தமது மாதாந்த சம்பளத்தின் மூலம் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாமல் கஸ்டப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு அநீதியான முறையில் 26 நாட்கள் செய்த வேலையை 12 குறைத்திருப்பது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமான செயல்பாடாகும்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக பிரதேச சபையில் அர்ப்பணிப்புடன் வேலை செய்த ஊழியர்களின் நலனை கருத்தில் கொள்ளாது சர்வாதிகாரிகள் போன்று விரும்பினால் 12 நாட்கள் வேலை செய்யுங்கள் இல்லாவிட்டால் வேலையை விட்டு நின்று கொள்ளுங்கள் என்று கட்டளை பிறப்பித்திருப்பது எந்த வகையில் நியாயமாகும்.

குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு மட்டும் மாதத்தில் 26 நாட்கள் வேலை செய்வதற்கு அனுமதியளித்த விடயத்திற்கு பிரதேச சபையின் பதில் செயலாளர் ஏற்றுக்கொள்ள முடியாத பதிலையும் வழங்கியுள்ளார். இந்த விடயத்தைப் பார்க்கின்றபோது பதில் செயலாளர் வேண்டுமென்றே குறிப்பிட்ட ஊழியர்களுக்கு அநீதியை இழைத்துள்ளதாக பலரும் சொல்லுகின்றார்கள்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் செயற்பட்டு வருகின்ற பொதுநூலகங்களில் கூடுதலாக வீதித் தொழிலாளிகளும், சுகாதாரத் தொழிலாளிகளும் கடமையாற்றி வருகின்றனர். அங்கு கடமை புரிந்த ஒரு சில நூலக உதவியாளர்களைக்கூட விட்டு வைக்காமல் பதில் செயலாளர் 12 நாட்களாகக் குறைத்து அநீதி செய்துள்ளார்.

நூலகங்களில் கடமையாற்றுகின்ற வீதித் தொழிலாளர்களையும், சுகாதாரத் தொழிலாளர்களையும் அவர்களது தொழில் நிமனத்திற்கு ஏற்ப பதில் செயலாளர் கடமைகளைப் பொறுப்பாக்கியிருந்தால் நூலகங்களில் கூடுதலான வெற்றிடங்கள் காணப்படும். அந்த வகையில் அங்கு நூலக உதவியாளர்கள் கூடுதலானவர்கள் நியமிக்கப்பட வேண்டிய தேவைப்பட்டிருக்ககும்.

இவ்வாறு நிலைமை இருக்கின்றபோது, நூலகத்தில் கடமையாற்றிய ஒரு சில நூலக உதவியாளர்களையும் நாட்களைக் குறைத்து வெளியேற்றியிருப்பது குறிப்பிட்ட ஊழியர்களின் உரிமையை மீறும் செயலாகும்.

அத்தோடு பல வீதித் தொழிலாளர்கள்,அட்டாளைச்சேனை பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளர்களின் கடமையை நிறைவேற்றுவதற்கான பொறுப்புக்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது  மாகாண சபையின் உயர்மட்ட அதிகாரிகளினது சிபார்சுகளுக்கு அமைய பதில் செயலாளர் நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

குறிப்பிட்ட ஊழியர்களுக்கு சட்டங்களை மீறி கடமையை செய்வதற்கும், வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்கும் வாய்ப்புக்களையும், வசதிகளையும் செய்து கொடுத்துள்ள பொறுப்பான் பதவியில் உள்ள பிரதேச சபையின் பதில் செயலாளர் தமது வாழ்வாதாரத்தையே கொண்டு நடத்த முடியாத சம்பளத்தைப் பெற்று வந்த ஊழியர்களின் வயிற்றில் அடித்திருப்பதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்.

மக்களின் ஆட்சியில்லாமல் மக்களுக்கான சேவைகளை ஆற்ற முடியாது என்கின்ற கோசத்துடன் ஆட்சிக்கு வந்த கிழக்கு மாகாண சபையும்,அதன் உறுப்பினர்களும் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் உழியர்களுக்கு நடந்துள்ள அநீயாயத்திற்கு நீயாயம் பெற்றுக்கொடுக்க முன்வருவார்களா? 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-