அமெரிக்கா- இலங்கை நாட்டு சட்டத்தரணிகள் சங்கங்கள் இணைந்து நடாத்திய சர்வதேச சட்டம் சம்பந்தமான கருத்தரங்கில் கலந்து கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்
அமெரிக்கா சட்ட அறிஞர்கள் சபையின் அணுசரணையுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த சர்வதேச சட்டங்களில் மனித உரிமைகள், சமூக வலைத்தளங்கள் மற்றும், இணையத்தளங்களின் சட்ட வரையறையும் அதன் சுதந்திரமும் எனும் தலைப்பிலான கருத்தரங்கும் பயிற்சிப் பட்டறையும் கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு இலங்கையின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் இப் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தாா்
. அமெரிக்கா, பிலிப்பயின்ஸ் நாட்டு வதிவிடப் பிரதிநிதிகள் உட்பட சா்வதேச சட்டவல்லுனர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.