News Update :

Thursday, January 12, 2017

TamilLetter

வடக்கில் தற்­போதும் அத்­து­மீ­றிய கைது­களும் படை­யி­னரின் கெடு­பிடி­களும் உள்ளன : கன­டாவில் முதல்வர் சி.விநீதியை நிலை­நாட்­டு­வதில் தேசிய, சர்வதேச பொறிமுறைகள் முறை­யாக கடை­ப் பி­டிக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்திய வடக்கு மாகாண சபை முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் வடக்கில் தற்­போதும் அத்­து­மீ­றிய கைது­களும் சட்­டத்­திற்கு புறம்­பான பாது­காப்பு படை­யி­னரின் கெடு­பிடி­களும் தொடர்­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

கனடா நாட்டின் பிரம்ரன் நக­ர­மா­னது வடக்கு மாகா­ணத்தின் வவு­னியா நக­ருடன் இரட்டை நகர ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­ட­வுள்­ளது. இந்­நி­கழ்வு எதிர்­வரும் பொங்கல் தினத்­தன்று நடை­பெ­ற­வுள்ள நிலையில் அங்கு சென்­றுள்ள வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வ­ர­னுக்கும், பிரம்ரன் நகரில் வசிக்கும் மக்­க­ளுக்கும் இடையில் பிரம்ரன் மாந­க­ர­சபை மண்­ட­பத்தில் விசேட சந்­திப்­பொன்று நடை­பெற்­றது.இச்­சந்­திப்பில் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சிறப்­புரை ஆற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், யுத்­தத்­திற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் ஏற்­ப­டுத்த வேண்­டிய அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் தொடர்பில் நாம் சிந்­திக்க வேண்டும். குறிப்­பாக வடக்கில் தொடர்ந்தும் ஒரு இலட்­சத்து 50 ஆயிரம் பாது­காப்பு படை­யினர் குவிக்­கப்­பட்­டுள்­ளனர். வடக்கு கிழக்கில் வன்­மு­றைகள் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன.
மாகாண சபைகள் தொடர்ந்தும் மத்­திய அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்டில் இயங்க வேண்­டி­யுள்­ளதால் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களில் மத்­திய அர­சாங்­கத்­தினை நம்­பியே செயற்­பட வேண்­டி­யுள்­ளது.
யுத்த காலத்தில் பல்­வேறு பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளான மக்­களின் தேவையை உணர்ந்து அதற்­காக செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். நீதியை சம­மாக பெற்­றுக்­கொள்­வதில் பாரிய தடைகள் காணப்­ப­டு­கின்­றன. பயங்­க­ர­வாத கண்­ணோட்டம் தொடர்ந்தும் நில­வு­கின்­றது.
நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான நிறு­வ­னங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும். அனைத்து மட்­டத்­திலும் சம­மா­ன­வர்­களின் வசதி வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொள்­வதில் உள்ள தடைகள் அகற்­றப்­பட வேண்டும் என நாம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம்.
நீதியை நிலை­நாட்­டு­வதில் தேசிய சர்­வ­தேச பொறி­மு­றைகள் முறை­யாக கடை­பி­டிக்­கப்­பட வேண்டும். தற்­போது வடக்கில் அத்­து­மீ­றிய கைது­களும் சட்­டத்­திற்கு புறம்­பான பாது­காப்பு படை­யி­னரின் கெடு­ப­டி­களும் தொடர்­கின்­றன.
புதிய அர­சாங்­கத்­தினால் நல்­லி­ணக்கச் செயற்­பாட்­டிக்­காக தீவிர முயற்­சிகள் எதுவும் காட்­டப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. ஐக்­கிய நாடுகள் சபை­யினால் முன்­மொ­ழி­யப்­பட்ட பரிந்­து­ரைகள் செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சியம். அதற்­கான தேவையும் எழுந்­துள்­ளது. அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் நாம் பின்­தங்­கி­யுள்ளோம் போக்­கு­வ­ரத்து குடிநீர், குடி­யி­ருப்பு வச­திகள் போன்­றன இன்னும் பல பிர­தே­சங்­களில் இல்­லாமல் உள்­ளன.
2015 ஆம் ஆண்­டுக்­கான அபி­வி­ருத்தி இலக்­குகள் சிறப்­பாக அடை­யப்­பட்­டுள்ள போதும் நிலை­யான அபி­வி­ருத்­திக்­கான குறி­காட்­டி­களை அடைய வடக்கு மாகாணம் முழு­மை­யாக அபி­வி­ருத்தி பாதைக்குள் இட்டுச் செல்­லப்­பட வேண்டும். படித்த பல்­லா­யிரக் கணக்­காண இளை­ஞர்கள் வேலை­வாய்ப்­பின்றி உள்­ளனர்.
தமது வாழ்­வா­தா­ரத்தை கொண்டு செல்ல முடி­யாத அளவு வறுமை தலை தூக்­கி­யுள்­ளது. மீள் குடி­யேற்ற பணி­களில் தாமதம் ஏற்­பட்­டுள்­ளது. எனவே இதற்­கான தேவைகள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
புதிய தொழில் நுட்ப வச­திகள் மற்றும் அபி­வி­ருத்தி மூலோ­பாய செயற்­பா­டு­களில் வளர்ச்சி ஏற்­பட வேண்டும். அனைத்து மட்­டங்­க­ளிலும் நீதியை நிலை­நாட்­டக்­கூ­டிய சமூக முறைமை ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். எனவே இவ்வாறான விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது இலக்காகும் என்றார்
இந்நிகழ்வில் நூற்றக்கணக்கான கனடா வாழ் தமிழர்கள் கலந்து கொண்டதோடு கனடா பிரம்ரன் நகர மக்களால் வடக்கு மாகாணத்தில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 45,000 டொலர் நிதியுதவியும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-