News Update :

Wednesday, January 18, 2017

TamilLetter

கோறளைப்பற்று பிரதேச சபைக்குரிய காணியில் கடைத்தொகுதி வேலை இடைநிறுத்தம்



வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்குரிய காணியில் கடைத் தொகுதியொன்று கட்டப்பட்டு கொண்டிருந்த நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை அரசியல் தலையீடு காரணமாக குறித்த கட்டுமானம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த பகுதியில் ஒருவித அசம்பாவித நிலைமை ஏற்;பட்டதையடுத்து பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த கலந்துரைடலின் போது கோறளைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் எஸ்.சீஹாப்டீன், வாழைச்சேனை வர்த்தக சங்கத்தவர்கள், முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள், கிராம அவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச சபைக்குரிய கணிக்குள் நிரந்த கட்டடமாக அமைத்து அதில் 4 முஸ்லிம்களுக்கும், 2 தமிழர்களுக்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச சபைக்குரிய காணியில் கட்டப்பட்ட கடைத் தொகுதி இடை நிறுத்தப்பட்டமைக்கு அரசியல் தலையீடுகள் தான் காரணமென தமிழ் மக்கள் தரப்பில் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குறித்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தியது மட்டுமின்றி கிழக்கு முதலமைச்சர் உத்தரவுக்கு அமைய இடித்து உடைக்குமாறு பணிக்கப்பட்டதாக பல்வேறுபட்ட வாதப் பிரதி வாதங்கள் கலந்துரையாடலின் போது இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர்; எஸ்.சீஹாப்டீன்
கோறளைப்பற்று பிரதேச சபைக்குரிய பழைய காணிக்குள் ஆறு வியாபார சகோதர்களுக்கான கடைத் தொகுதி கட்டுமான ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த இடத்தில் பல சர்ச்சைகள் ஏற்பட்டது.
குழப்பகரமான நிலையை தொடர்ந்து திணைக்களத்தின் ஆலோசனை வழிகாட்டல் கிடைக்கப் பெறும் வரை குறித்த இடத்தில் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்திருக்கின்றேன்.
குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு முதலமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் ஒரு சட்ட ஆலோசனை குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் பின் பிரதேச சபையின் உரித்து உமையையும், காணியை உரிமை கோருகின்றவர்களிடத்தில் இருக்கும் ஆவணங்களையும் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் அதனடிப்படையில் இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படுமென தெரிவித்தார்.
கிழக்கு முதலமைச்சரின் அழுத்தத்தினால் குறித்த கடைத் தொகுதிக்கான வேலை இடை நிறுத்தப்படவில்லை என மறுதலித்ததுடன், கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவருக்கம் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்ததுடன் குறித்த காணி பிரதே சபைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-