News Update :

Thursday, January 19, 2017

TamilLetter

வாழைச்சேனைக் காணி தொடர்பில் விசமத்தனமான கருத்துகளை பரப்ப வேண்டாம் – அன்வர் நௌஷாத்


வாழைச்சேனை பிரதேசபை எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள காணி தொடர்பிலாக இழுபறி தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், எரிகின்ற தீயினை மேலும் கொழுந்துவிட்டு எரிய செய்துள்ளது வாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்க அறிக்கை. வாழைச்சேனை ஜூம்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான காணி என எல்லையிடப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பிலாக தமக்கு தெரிந்த உண்மைகளை மறைத்து முழுப் பூசணிக்காயை பீங்கானுக்குள் மறைத்துள்ளனர். இந்த பிரதேசம் இது தொடர்பிலாக நாம் பெரிதும் கவலையடைகிறோம் என காஸ்ட்ரோ (CASDRO) தலைவரும், முன்னணி சமூக செயற்பாட்டாளருமான அன்வர் நௌஷாத் தெரிவித்தார்.

அக் காணியின் உரிமை இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முந்திய முஸ்லீம்களுக்கு உரித்துடையதாகும். வாழைச்சேனையின் கிராம சபை தலைவராகவும், பள்ளிவாயல் தலைவராகவும் ஒரே நேரத்தில் பதவி வகித்த அரவிமுத்து மரைக்கார் தனது சொத்துக்களையும், தருமங்களையும் தனித்தனியே பேணியிருக்கிறார். அதிலுள்ள புரிந்துனர்வின்மையே இவ்விழுபறிக்கு காரணமாகியுள்ளது. அத்துடன் அதே அடிப்படை உறுதியை கொண்ட காணி யொன்றின் இன்னுமொரு பகுதியே தற்போது கட்டப்பட்டுள்ள பொதுச் சுகாதார பணிமனை. அதேவேளை அவ்வுறுதியில் சுட்டிக்காட்டப்படும் பல நிலப் பகுதிகள் தற்போது தமிழர் பிரதேசம் என வரையறை செய்யப்படுகின்ற சில பகுதிகளின் உள்ளே ஆழமாக உள்ளது. இது பற்றிய முறையான ஆவணங்களும் உள்ளன. இந்நிலையில், இவற்றை ஒரு காரணமாக கொண்டு முஸ்லீம் தமிழ் மக்களிடையே கலவரமொன்றையோ அல்லது மனக்கஷ்ட்டம் ஒன்றையோ ஏற்படுத்த நாம் ஒரு போதும் முயன்றதில்லை. அவ்வாறான மனோ நிலை இருப்பின் எப்போதோ சட்ட ரீதியிலான நடவடிக்களை மேட்கொண்டிருக்க முடியும், இருப்பினும், அப்பிரதேசத்திலுள்ள மக்களின் அந்நியோன்னிய வாழ்க்கையே நமது இன்றியமையாத சொத்தாக நாம் கொள்கிறோம். இதுவே வாழைச்சேனை ஜும்மா பெரிய பள்ளியினதும் நிலைப்பாடு. அண்மைக்காலமாக வாழைச்சேனை பிராந்தியத்தில் சில அநாமோதய துண்டுப் பிரசுரங்களும், கருத்துக்களும் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றமையை நாம் அறிவோம். அவ்வாறான சுயநல வாதக் கும்பல்களின் நயவஞ்சக செயட்பாடுகளுக்குள் சிக்காமல், சட்டம் ஒழுங்கு மனித நேயத்துடன் நமது பிரட்சனைகளை முன் வைத்து வெற்றி கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். எனவும் கூறினார், முஸ்லீம்களின் காணிகள் தொடர்பிலான காஸ்ட்ரோ குழுக்கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-