மறைந்த சர்வதேச நீதிமன்றத்தின் உபதலைவர் நீதியரசர் ஜீ.ஜீ வீரமந்திரியின் மறைவுக்கு முஸ்லிம் காங்றஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ கபூர் அவர்கள் அனுதாபம் தெரிவிக்கிறார்.
இலங்கையின் புகழ் பூத்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் திரு.ஜீ.ஜீ வீரமந்திரி அவர்கள் அண்மையில் காலமானதையிட்டு எங்கள் அனுதாபத்தை அவரின் குடும்பத்திற்கும் உறவினருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர் இலங்கை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக 1948ம் ஆண்டு பதவியேற்றவராவார். அதன் பின்பு 1967ம் ஆண்டிலிருந்து 1972ம் ஆண்டு வரை இலங்கை உயர் நீதி மன்றத்தின் நீதிஅரசராக கடமையாற்றிய இவர் தனது 90 வயதில் காலமானது இந் நாட்டிற்கும் உலக நீதித்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாகும்.