News Update :

Sunday, January 22, 2017

TamilLetter

முஸ்லிம்கள் இந்த நாட்டில் நோ்மையாக வாழ்ந்து வருபவா்கள்

;


வரலாறுகளை புரட்டிப் பார்த்தால் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பல்வேறு தியாகங்களை செய்து வந்துள்ளதை அறிய முடியுமென அல்-பலாஹ் பள்ளிவாசலின் தலைவர் ஏ.எல்.எம்.சித்திக் தெரிவித்தார்.

புதிய நல்லாட்சியில் சிறுபான்மை  முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடா்பாக   கருத்து தெரிவிக்கையில் இந்த நாட்டில் ஆட்சி செய்த பல அரசாங்கங்கள் தாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல வாக்குறுதிகளை எம் மத்தியில் அள்ளி வழங்கி எமது ஆதரவுகளைப் பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின் எமக்கு அநியாயனம் செய்த வரலாறுகளே காணப்படுகின்றன.  ;.

இந்த துரோகங்கள்; காலத்துக்கு காலம்  தொடர் கதையாகவே போய்க் கொண்டிருக்கின்றது.

மறுபுறம் உரிமைக்காக போராடும் இன்னொறு சிறுபான்மை தமிழ் தேசியம் முஸ்லிம் சமூகத்தை ஒரம் கட்டும் நடவடிக்கைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்ய ஆரம்பித்தது.
இந்த காலகட்டத்தில்தான் முஸ்லிம்களின் குரல் தேசிய சர்வதேச அரங்கில் ஒலிக்க வேண்டுமென்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி காலத்தின் தேவையாக உறுவெடுத்தது.

இப்படியான கால கட்டத்திலதான் இரவோடு இரவாக இந்திய இலங்கை ஒப்பந்தங்கள் எழுதப்பட்டு வடகிழக்கு இணைக்கப்பட்டு முஸ்லிம் சமூகத்தை; அடிமைச் சமூகமாக மாற்றினர்.
நமது சமூகத்தின் இருப்பையே கேள்விக்குட்படுத்திய இவ் ஒப்பந்தத்தை தட்டிக் கேட்க வக்கற்றவர்களாக நமது கைகளும்,வாய்களும் கட்டப்பட்டது. இதற்கு மாற்று வழிகள் எதுவுமே தென்படாத போதும் 1988ம் ஆண்டு மறைந்து மறைந்து வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு 29 உறுப்பினர்களை தன்வசப்படுத்தி எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்த்தப்பட்டனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாத விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்த முஸ்லிம்களை 24 மணித்தியாலங்களுக்குள் உடுத்த உடையுடன் ஆயிரம் ரூபா பணத்தை மட்டும் எடுத்துச் செல்ல கட்டளையிட்டு விரட்டியடித்த கோர சம்பவங்கள் இன்னும் நம் கண்ணை விட்டு அகலாத காட்சியாகவும் விரட்டப்பட்ட மக்களின் துயரங்கள் இன்னும் முடிவுக்கு வராத கதையாகவும் போய்க் கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்தின் யுத்த வெற்றிக்கு பிற்பாடு அரசாங்கத்தின் ஆதரவோடு  பெரும்பான்மை சமூக இனவாதிகளினால் முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.ஹராம் ஹலால் போன்ற விடயங்களில் ஆரம்பித்து முஸ்லிமகளின்; பொருளாதாரம் மற்றும் சொத்துக்களை அழித்தொழிப்பதிலேயே இனவாதிகளின் இலக்காக இருந்தது
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவோம் என கோசமிட்டு ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளையும் பெற்று ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசாங்கம் இன்று ஒரு படிமேல் சென்று மீண்டும் இனவாதிகளின் கைக்கூலியாக மாறி வருகின்றது.
முஸ்லிம்களின் பூர்வீக காணிகள்,; மற்றும் புனிதத் தளங்கள் மீது ஆக்கிரமிப்புக்களை செய்து புராதண சின்னமாக அடையாளப்படுத்தி  வருகின்றது.

நாட்டின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த ஆட்சி பீட மேறிய ஆட்சியாளர்கள் முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியான வன்முறைகளை கட்டவிழு;த்து விடுவது எந்த விதத்திலும் ஏற்க முடியாதது என மேலும் அவர் தெரிவித்தார்.  ;

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-