News Update :

Thursday, January 12, 2017

TamilLetter

ஒலுவில் பிரதேசத்திலுள்ள வருமானம் குறைந்தவர்களுக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் உதவி





எஸ்.முஸ்னி

ஒலுவில் பிரதேசத்திலுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் நிதி மூலம் சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(12) அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எல்.நபீல் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தொழில் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

மேலும் ஒலுவில் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கும் தமது நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களையும் கழக நிர்வாகிகளிடம் கையளித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-