News Update :

Tuesday, January 31, 2017

TamilLetter

வைத்தியருக்கு தங்க மோதிரம்




(ஹாசிப் யாஸீன்)

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணராக கடமையாற்றிய பீ.கே.ரவீந்திரன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றலாகிச் செல்வதையிட்டு சேவை நலன் பாராட்டு நிகழ்வு நேற்று (31) செவ்வாய்க்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றகுமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்திய நிபுணர்களான ஏ.எம்.றசீன்இ எம்.எம்.ஹபீழ்இ கண் வைத்தியர் எம்.எம்.ஏ.றிசாட்இ உளவள வைத்தியர் எம்.சறாப்தீன்இ தர முகாமைத்துவ கட்டுப்பாட்டு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உள்ளிட்ட வைத்தியர்கள்இ தாதியர்கள்இ உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சத்திர சிகிச்சை நிபுணர் பீ.கே.ரவீந்திரன் கடந்த ஆறு வருடங்களாக சிறப்பாக கடமையாற்றி கல்முனை பிரதேச மக்களினதும்இ வைத்தியசாலை உத்தியோகத்தர்களினதும் நன்மதிப்பை பெற்றவர்.

அன்னாரின் இச்சேவையினை பாராட்டி வைத்தியசாலை வைத்தியர்கள்இ உத்தியோகத்தர்கள் நினைவுப் பரிசு வழங்கிஇ பொன்னாடை போர்த்திஇ கவிதை மற்றும் வாழ்த்துப்பா பாடி கௌரவித்தனர்.
நிகழ்வில் விஷேடமாக வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றகுமான் வைத்திய நிபுணர் ரவீந்திரன் மக்களுக்கும் வைத்தியசாலையின் வளர்ச்சிக்கும் ஆற்றிய உயரிய சேவைக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்தார்.

சத்திர சிகிச்சை நிபுணர் ரவீநதிரன் மாற்றலாகி செல்லும் இடத்திற்கு மருதமுனையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர் எம்.எம்;.சமீம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-