News Update :

Monday, January 9, 2017

TamilLetter

ஹஸனலிக்கே எம்.பி வழங்க வேண்டும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நஸீர்

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலமிக்கதொரு கட்சியாக கொண்டு செல்வதற்கு அனுபமும், ஆற்றலுமுள்ள சிரேஷ்ட பொதுச் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார்.

 இது விடயமாக அவர் இன்று(09) ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையில் மேலும் அவர் தெரிவித்ததாவது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரினால் மதிக்கப்பட்டவரும் ஆரம்பகால உறுப்பினராகவும் இருந்து இன்றுவரை கட்சிக்காக பாடுபட்டுழைத்து வரும் செயலாளர் ஹசன்அலியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தடுப்பதற்கு கட்சியில் எவருக்கும் அருகதை கிடையாது.

 சுய நலப்போக்குடையவர்களும், அரசியல் வங்குரோத்துக்காரர்களும் தனது இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக ஹசன் அலிக்கு வழங்கப்படவுள்ள தேசியப் பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் எதிர்ப்பினைக் காட்டி வருகின்றனர்.

 அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கேட்டு பெற்றுக்கொள்வதற்கான உரிமைகள் அப்பிரதேச மக்களுக்குள்ளன. இதேவேளை ஹசன் அலிக்கு வழங்கப்படவிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தடுப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

கட்சிக்குள் புதிதாக நுளைந்து பல நன்மைகளையும், பதவிகளையும்  பெற்றுக் கொண்ணடவர்கள் அந்தக் கட்சிக்காகவும்,  சமூகத்திற்காகவும் செய்தவை என்ன என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

 சமூகத்தின் வரலாறுகள் மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தின் அனைத்து சமூக, கலாசர, அரசியல், காணிப்பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிந்தவரும் அது தொடர்பாக தேசிய, சர்வதேச மட்டத்தில் பேசக்கூடிய திராணியுமுள்ள ஒருவராக செயலாளர் நாயகம்  காணப்படுகின்றார். 

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்கடர் ஜலால்தீனுக்கு பிறகு அட்டாளைச்சேனை பிரதேசம் சுமார் 30 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஏங்கி நிற்கின்ற அவலம் இன்றும் தொடர்கின்றது.

 அட்டாளைச்சேனை பிரதேசம் சுமார் 35,000 வாக்குகளை வைத்திருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அஞ்சி, கெஞ்சி நிற்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையை இந்த பிரதேச அரசியல் தலைமைகள் ஏற்படுத்தியுள்ளனர்.

 தேசியப் பட்டியல் முறையை விட்டு விட்டு ஏன் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது என்பதனை இந்த தலைமைகள் மக்களுக்கு கூற வேண்டும். அம்பாறை மாவட்டத்தை எவருக்கும் நிரந்தரமாக எழுதிக் கொடுக்கப்படவில்லை. இம்மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று பேர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நிற்பது எந்தவித்தத்தில் நியாயம் என்பதனை ஏனைய பிரதேசங்கள் தட்டிக் கேட்க வேண்டும்.

 பிள்ளைப் பாக்கியம் கிட்டாத ஒரு மலட்டுத்தாய்க்கு 30 வருடங்களின் பின்னர் அவள் கேட்ட பிரார்த்தனையின் பலனாக ஒரு அங்க வீனக்குழந்தை பிறந்த கதையைப் போல் 30 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஏங்கிய மக்களுக்கு எந்தவித கலந்தாலோசனையுமின்றி மாகாண சுகாதார அமைச்சு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 

 எனவே மக்கள் தெளிவடைய வேண்டும். அப்போதுதான் தலைமைத்துவங்கள் தமது முடிவுகளை மாற்றிக் கொள்வார்கள். அட்டாளைச்சேனை பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும், ஹசன் அலிக்கும் முடிச்சு போட்டு மக்களை வீனாக குழப்பமடையச் செய்ய வேண்டாம்.

பிறந்திருக்கும் இப்புத்hண்டு முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சவால் மிக்க ஆண்டாக அiயும் என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. குறிப்பாக அரசியல் யாப்பு சீர்திருத்தம், இனப்பிரச்சினைக்கான தீர்வு முன் வைப்பு, வேரூண்றி வரும் கடுமையான இனவாதப் போக்கு, வடபகுதி மக்களின் வில்பத்து பிரச்சினை என பாரிய சவால்கள் உள்ளன.

 இந்நிலையில் பிரதேச மட்டங்களிலுள்ள சிறு, சிறு தலைமைகள் தமது சுயநல போக்கை கைவிட்டு பிரிந்து நிற்கும் எமது அரசியல் தலைமைகளை ஒற்றுமைப் படுத்தி எம்முன்னே தோன்றி வரும் சமூகத்தின் சவால்களை வெல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-