News Update :

Sunday, January 22, 2017

TamilLetter

ஒலுவில் மாணவா்களுக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உதவி









ஒலுவில் பிரதேசத்திலுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களின் கல்வித் தேவையை நிவா்த்தி செய்யும் பொருட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எல்.நபீல் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலை வாய்ப்பு செயலாளருமான ஏ.எல்.தவம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு வெய்யப்பட்ட மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தாா்.

இந் நிகழ்வில் அரசியல் பிரமுகா்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்

அத்தோடு ஒலுவில் நைட் றைடர் விளையாட்டுக் கழகத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் மாகாண சபை உறுப்பினர் இதன் போது வழங்கி வைத்தாா்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-