News Update :

Sunday, January 1, 2017

TamilLetter

காத்தான்குடியைச் சோ்ந்த நபர் விமான நிலையத்தில் கைது



டுபாயில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் 540 கிராம் தங்கத்தை எடுத்துவந்த மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள பிரிவினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை(01) அதிகாலை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் டுபாயில் இருந்து இன்று அதிகாலை 5.40 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் வந்திருந்தபோது அவரை சுங்க திணைக்கள பிரிவினரால் சோதனை நடத்தியபோது அவரிடமிருந்த 540 கிராம் தங்கத்தை கைப்பற்றியதுடன் அவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை சங்கதிணைக்களப் பிரிவு மேற் கொண்டுவருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-