News Update :

Wednesday, January 25, 2017

TamilLetter

68வது குடியரசு தின கொண்டாட்டம்



இந்தியாவின் 68வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக நடந்தது. டெல்லியில் ராஜபாதையில் நடந்த விழாவில், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார்.
இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக ஐக்கிய அரேபிய சிற்றரசின் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமத் பின் சையட் பங்கேற்றார். 
இந்த 68வது குடியரசு விழாவில், வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் ஹெங்பன் தாதாவிற்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை அவரின் மனைவி, குடியரசு தலைவர் பிராணாப் முகர்ஜியிடம் பெற்று கொண்டார்.
பின்னர், முப்படையினரின் அணிவகுப்பு நடைப்பெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையைப் குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-