தாக்குதல் நிகழ்த்தப்பட்ட கியூபெக் நகர மசூதி அருகே அமைதிச் சின்னத்தை ஏந்தி முஸ்லிம்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் பொதுமக்கள்.
கனடாவின் கியூபெக் நகரிலுள்ள மசூதியில் 2 மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர்.முஸ்லிம்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலை, "பயங்கரவாதத் தாக்குதல்' என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருணித்துள்ளார்.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:கனடா நாட்டின் கியூபெக் மாகாணத் தலைநகர் கியூபெக் நகரின் "செயின்ட்-ஃபாய்' புறநகர்ப் பகுதியில் "கியூபெக் நகர இஸ்லாமிய கலாசார மையம்' என்ற மசூதி அமைந்துள்ளது.

இந்த மசூதியில், ஞாயிற்றுக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது.அப்போது உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 7.15 மணிக்கு அந்த மசூதிக்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.இந்தத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டைன் கூலம்பே தெரிவித்தார். உயிரிழந்த அனைவரும் 35 முதல் 70 வயதுக்குள்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.
தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதலில் 3-ஆவது நபரும் ஈடுபட்டிருப்பதற்கான வாய்ப்பை மறுப்பதிற்கில்லை என்று கிறிஸ்டைன் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து உடனடியாகத் தகவல் இல்லை. கியூபெக் நகரில் வேகமாக அதிகரித்து வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறித்து அங்குள்ள அமைப்புகள் கவலை தெரிவித்து வந்துள்ளன.
மேலும், ஏற்கெனவே இன அடிப்படையிலான தாக்குதல்கள் அந்த மாகாணத்தில் நடந்துள்ளதால், இந்தத் துப்பாக்கித் தாக்குதலுக்கு இனவாதமே காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஹொலாந்த் கண்டனம்: இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், கியூபெக் நகர மக்களிடையே நிலவும் அமைதியையும், ஒற்றுமையையும் குலைக்கும் நோக்கத்திலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
பிரதமர் கண்டனம்
இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: கியூபெக் மசூதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாகும். கனடா நாட்டின் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம் மதத்தவர் இரண்டறக் கலந்துள்ளனர்.அவர்கள் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.