News Update :

Thursday, January 12, 2017

TamilLetter

மூன்று இலட்சம் டொலர் சேமிப்புடன் இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு 5 வருடங்களுக்கு விசா வழங்கப்படும்


மூன்று இலட்சம் டொலர் சேமிப்பு அல்லது செலாவணியுடன் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு இலங்கையில் தங்கியிருக்க விசா வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 
 கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்ததாவது,      தம்மிடமுள்ள மேலதிக பணத்தை இலங்கையில் வைப்பிலிடுமாறு நாம் உலகவாழ் மக்களுக்கு கூறுகின்றோம். மூன்று முறைகளில் இலங்கையில் முதலீடு செய்யலாம். முதலாவது விடயமாக பங்குச் சந்தையில் வெளிநாட்டவர்களுக்கு முதலீடு செய்ய முடியும். அடுத்து வங்கித்துறை மற்றும் முறிகளில் முதலீடு செய்யலாம். பரிமாற்று கட்டுப்பாட்டை நாம் முற்றாக நீக்கவுள்ளோம். கோடிக்கணக்கான பணத்தை ஒரே தடவையில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல முடியாது. அதனை மாத்திரம் நாம் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம். மூன்று இலட்சம் டொலர் செலாவணி அல்லது சேமிப்புடன் வெளிநாட்டவர் ஒருவர் இலங்கைக்கு வருவாராக இருந்தால், தற்காலிகமாக அவருக்கு இங்கு தங்குவதற்கான வாய்ப்புள்ளது. 
நிர்வாகத்தில் அந்த வாய்ப்பு வழங்கப்படும். அத்துடன், அது தொடர்பிலான சட்ட பின்புலத்தையும் இன்னும் இரண்டு மாதங்களில் நாம் ஏற்படுத்துவோம். தற்போது 5 வருடங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.  கடன்களைப் பெறாமல், வட்டி செலுத்தாத செலாவணியைப் பெற்றுக்கொள்வதே தமது நோக்கம் என குறிப்பிட்ட நிதி அமைச்சர், இதன் மூலம் கடந்த முறையும் சுமார் 7 மில்லியனைப் பெற்றுக்கொண்டதாக சுட்டிக்காட்டினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-