News Update :

Tuesday, January 17, 2017

TamilLetter

இலங்கையில் 40 வரு­டங்­க­ளின் பின் மோச­மான அபா­யம்!



நாட்டில் நிலவும் கடு­மை­யான வரட்சி கார­ண­மாக 9 மாவட்­டங்­களிலும் 42,010 குடும்­பங்­களைச் சேர்ந்த 1,49,598 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.

இலங்கை கடந்த 40 வரு­டங்­களில் சந்­தித்­தி­ராத மிக மோச­மான வரட்­சியை எதிர்­கொண்­டுள்­ள­தாக அர­சாங்கம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­துடன் வரட்­சியை எதிர்­கொள்­வ­தற்­கான அனைத்து தயார்­ப­டுத்­தல்­க­ளையும் மேற்­கொண்­டுள்­ள­தாகவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
நாடு­ மு­ழு­வ­தி­லு­முள்ள பெரிய நீர்த்­தேக்­கங்­களில் நீர்­மட்டம் தற்­போது வெகு­வாக குறைந்­துள்­ளது.

இந்­நி­லையில், நீர்த்­தேக்­கங்­களில் உள்ள நீர், இரண்டு மாதங்­க­ளுக்கு மாத்­தி­ரமே குடிநீர்த் தேவைக்கு பயன்­ப­டுத்த முடி­யு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் மலை­ய­கத்தில் நிலவும் வரட்­சி­யான கால­நிலை தொடர்ந்து நில­வினால் மின் உற்­பத்தி அளவு குறை­வ­டையும் நிலை தோன்­றும் என்றும் மின்­சார சபை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

மலை­ய­கத்தின் பிர­தான நீர்த்­தேக்­கங்­க­ளான காசல்ரீ மற்றும் மவுஸ்­ஸா­கலை, மேல்கொத்­மலை போன்ற நீர்­தேக்­கங்­களின் நீர்­மட்டம் வெகு­வாக குறைந்­துள்­ளது.
இந்த கால­நிலை நீடித்தால் நோட்டன், விம­ல­சு­ரேந்­திர, லக்­க்ஷ­பான, நவ­லக் ­ஷ­பான, கெணியன், பொல்­பிட்­டிய ஆகிய நீர்மின் உற்­பத்தி நிலை­யங்­களின் மின் உற்­பத்­தியின் அளவு குறை­வ­டையும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதனால் நாட்டின் மொத்த மின்­சார உற்­பத்­தியில், 36 வீத பங்­க­ளிப்பை வழங்கும் நீர்மின் உற்­பத்தி கடு­மை­யான சரிவைச் சந்­திக்கும் எனவும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

குடிநீர் மற்றும் மின்­சார பயன்­பாடு தொடர்­பான பல்­வேறு கட்­டுப்­பா­டுகள் நடை­மு­றைக்கு கொண்டு வரப்­ப­ட­வுள்­ள­தா­கவும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, நாட்டில் நிலவும் கடு­மை­யான வரட்சி கார­ண­மாக குடிநீர்த் தட்­டுப்­பாடு ஏற்­ப­டலாம் எனவும் அதற்­கான முன்­னேற்­பாடு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்தின் பணிப்­பாளர் பிரதீப் கொடிப்­பிலி தெரி­வித்­துள்ளார்.

இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் நாடு­மு­ழு­வதும் வரட்­சி­யினால் 9 மாவட்­டங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, விவ­சா­யத்தை நம்­பி­யுள்ள இலட்­சக்­க­ணக்­கான மக்­களின் வாழ்­வா­தாரம் கேள்­விக்­குள்­ளா­கி­யுள்­ளது.
நாட்டில் நிலவும் கடு­மை­யான வரட்சி கார­ண­மாக 9 மாவட்­டங்­களைச் சேர்ந்த 42,010 குடும்­பங்­களைச் சேர்ந்த 1,49,598 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் நேற்று வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்துள்­ளது.
வடக்கு, கிழக்கு உட்­பட 09 மாவட்­டங்­களில் வரட்­சி­யான கால­நிலை கார­ண­மாக 42 ஆயி­ரத்து 10 குடும்­பங்­களைச் சேர்ந்த ஒரு இலட்­சத்து 49 ஆயி­ரத்து 598 பேரே பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

குறிப்­பாக யாழ்ப்­பாணம், மன்னார், அநு­ரா­த­புரம், பதுளை, மொன­றா­கலை, ஹம்­பாந்­தோட்டை, கம்­பஹா, கண்டி, திரு­கோ­ண­மலை ஆகிய 9 மாவட்­டங்­களே அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்துள்­ளது.

கடும் வரட்சி கார­ண­மாக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள மாவட்­டங்­களில் ஒன்­றான யாழ்ப்­பாண மாவட்­டத்தில் 24 ஆயி­ரத்து 324 குடும்­பங்­களைச் சேர்ந்த 85 ஆயி­ரத்து 461 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

யாழ். ­மா­வட்­டத்தில் வேலணை, ஊர்­கா­வற்­துறை, காரை­நகர், நல்லூர், கோப்பாய், சங்­கானை, சண்­டி­லிப்பாய், உடுவில், தெல்­லிப்­பளை, சாவ­கச்­சேரி, கர­வெட்டி, பருத்­தித்­துறை, மரு­தங்­கேணி ஆகிய பிர­தே­சங்கள் வறட்­சி­யினால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, மன்னார் மாவட்­டத்தில் மன்னார் நகர்ப்­ப­குதி, நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 235 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் வரட்சி காரணமாக முத்துநகர், மங்கையூற்று, வெல்ஹம ஆகிய பிரதேசங்களிலுள்ள 440 குடும்பங்களைச் சேர்ந்த 1381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீடிக்கும் வரட்சியான காலநிலை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-