ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரு வருடங்கள் நிறைவை முன்னிட்டு, 285 சிறைக் கைதிகள் இன்று (08) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாடு முழுவதிலுமுள்ள கைதிகளிலிருந்து 285 பேர் விடுதலையாகவுள்ளனர். மஹர, அனுராதபுர, வாரியபொல, வெலிக்கடை ஆகிய சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறு குற்றங்களுக்காக தண்டப் பணத்தைச் செலுத்திக் கொள்ள வசதியற்ற கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு செல்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.