காஷ்மீரில் பல இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை, 20-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 பேர் இராணுவ வீரர்கள். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வீடு ஒன்று பனிச்சரிவில் புதையுண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். பன்டிபோரா மாவட்டத்தில் பனிச்சரிவில் புதையுண்ட 7 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதே போல் குரேஷ் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் முகாம் திரும்பிய போது, பனிச்சரிவில் சிக்கிப் புதையுண்டனர். இவர்களில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான 4 வீரர்கள் கடந்த இரு நாட்களாக தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டது.
இந்த பனிச்சரிவு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 20 பேர் பலியாகியுள்ளனர்.