News Update :

Friday, January 20, 2017

TamilLetter

சந்தையில் குண்டுவெடிப்பு; 18 பேர் பலி, 50க்கும் மேற்பட்டவர்கள் காயம்




பாகிஸ்தானின் காய்கறிச் சந்தையில் சற்று முன் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடகிழக்குப் பிராந்தியமான பரச்சினார் நகரில் உள்ள ஈகா சந்தையிலேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது நூற்றுக்கணக்கான மக்கள் காய்கறி மற்றும் பழங்கள் வாங்குவதற்காக குறித்த சந்தையில் ஒன்று கூடியிருந்ததாகக் கூறப்படுகிறது.
சந்தைக்கு வந்திறங்கிய காய்கறிக் கூடை ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்ததாகத் தெரியவருகிறது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
ஈகா சந்தைப் பகுதியில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.v

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-