மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் 14 மருத்துவர்கள் வெளிநாட்டு மாநாடொன்றில் ஒரே நேரத்தில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்தார்.
அண்மையில் குறித்த 14 மருத்துவர்களும் நோர்வே நாட்டில் நடைபெறும் கருத்தரங்கொன்றில்; கலந்து கொள்வதாக கூறி சென்றுள்ளனர். ஆனாலும் அவர்களது உத்தியோகப்பூர்வமான விஜயம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதால் விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளார்.
குறித்த மருத்துவர்கள் ஒரே நேரத்தில் வெளிநாடு சென்றது பிரச்சினைக்குரியது என்பதாலும் அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றமைக்கான காரணத்தையும் அறிய வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.