News Update :

Thursday, January 12, 2017

TamilLetter

புதிய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்தை ஒத்த அதிகாரப்பகிர்வு! - சுமந்திரன்




உத்தேச அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒத்த வகையில், அதிகாரங்கள் பகிரப்படும். அதில் காணப்படுகின்ற பொதுப்பட்டியல் நீக்கப்படும். எனினும் வடக்கு – கிழக்கு இணைப்பு, முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும்வரை சாத்தியமாகாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

'தற்போது, சமஷ்டியா – ஒற்றையாட்சியா என்பது நாடளாவிய ரீதியில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பானது குறித்த வார்த்தைப் பிரயோகங்கள் எதனையும் கொண்டிருக்காது எனவும், பகிரப்படுகின்ற அதிகாரங்களை மீளப் பறித்தெடுக்கமுடியாத வகையிலான சட்ட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டு, எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காத முழுமையான அதிகாரப் பகிர்வாக அமையும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையில் மாற்றங்கள் வருவதால், ஆளுநருக்கு தற்போது காண்ப்படுகின்ற அதிகாரங்களையும் புதிய அரசியலமைப்பு மட்டுப்படுத்தும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-