குல்ஸான் எபி
தனக்கு உதவாதது யாருக்குமே உதவக் கூடாது என்பது போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களின்; அண்மைக்கால செயற்பாடுகள் மக்கள் மத்தியில் வெளிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை எப்படியாவது பழி தீர்த்து விட வேண்டுமென்று; கங்கணம்கட்டி அதை கட்சிதமாக செயலாற்றும் திறமை ஒரு சிலருக்கு மாத்திரமே.
அந்த வகையில்தான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒரு குற்றவாளியாக மக்கள் மத்தியில் இனம் காட்டுவதற்கு ; ஒரு புத்தகம் பரவலாக எல்லோருடைய கைகளிலும் தவழ்ந்து கொண்டிருக்கின்றது.
குற்றவாளி ஏதோ ஒரு தடயத்தை தான் அறியாமல் விட்டு விடுவது போல் இதிலும் பல தடையங்களை புத்தக ஆசிரியர் தவற விட்டதனால் யார் என்பதை துள்ளியமாக காட்டிக் கொடுத்து விட்டது.
கட்சியின் கட்டுக்கோப்பை மீறி; கட்சித் தலைமைக்கு எதிராக மேற் கொள்ளப்படும் சதி வலைகளை இனியும் விட்டு வைக்க முடியாது எனவே சதிகளை மேற்கொள்ளும் நபருக்கு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டியது தலைமையின் பொறுப்பாகவுள்ளதை தலைமை தற்போது நன்கு புரிந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மக்கள் மத்தியில் இழிவாக்க வேண்டுமென்பதற்காக உரிமை கோராதவர்களால் இப்படியான கதைகளை புத்தக வடிவில் கொண்டு வருவதன் மூலம் அடையப் போவது ஒன்றுமேயில்லை
இருந்த போதும் கட்சியை மலினப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட புத்தகத்தின் உரிமையாளர் யார் என்பது தெட்ட தெளிவாகவுள்ளதால் அந்த நபருக்கு எதிரான சாட்சியங்களை உறுவாக்கி சட்டத்தின் மூலம் 100 கோடி ரூபா பெருவதற்கு இரகசியமான முறையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாக நம்பப்படுகின்றது.