News Update :

Tuesday, January 17, 2017

TamilLetter

10 வருடத்திற்குப் பின் சந்தித்த இரட்டைச் சகோதரிகளின் ஆனந்தக் கண்ணீர்! (Video)



குழந்தையாக இருந்த போதே பிரிந்த இரட்டைச் சகோதரிகள் 10 வருடங்களுக்குப் பிறகு ஒரு தொலைகாட்சியில்நி கழ்ச்சி மூலம் சந்தித்துக்கொண்டனர். 
ஆட்ரி டோரிங் மற்றும் கிரேசி ஆகிய இருவரும் சீனாவில் இரு வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டனர்.  தாம் தத்தெடுத்து வளர்க்கும் ஆட்ரியின் பின்புலம் குறித்து அவரது தாய் மேலும் ஆராய்ந்த போது, அவளுக்கு ஓர் இரட்டைச் சகோதரி இருப்பதைக் கண்டுபிடித்தார். 
இதனையடுத்து, கிரேஸி  ரெயின்ஸ்பெர்ரிஸின்  குடும்பத்தைத் தொடர்புகொண்டப் பின்னர், ஆட்ரி மற்றும் கிரேஸி இரட்டைச் சகோதரிகள் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் சந்திக்கும்  வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. 
ஒரே முகச் சாயல், பிறந்த தேதி மட்டுமல்லாமல், இருவருக்கும் ஒரே மாதிரியான பிறவி இருதய குறைபாடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-