News Update :

Sunday, December 18, 2016

TamilLetter

பூட்டிய வீட்டுக்குள் 8 நாட்களாக முடங்கியிருந்த மூதாட்டி பொலிசாரால் மீட்பு!





வவுனியாவில் 8 நாட்களாக தனிமையில் வீட்டுக்குள் முடங்கியிருந்த மூதாட்டி ஒருவர் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் உள்ள வீடு ஒன்று கடந்த எட்டு நாட்களாக பூட்டப்பட்டது. பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் வசித்த மூதாட்டியை கண்ட அயலவர்கள் வாயில் கதவு ஊடாக உணவு வழங்கி வந்தனர். இந்நிலையில் நேற்று குறித்த மூதாட்டியின் நடமாட்டத்தை காணாத அயலவர்கள் ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கினர்.


சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் குறித்த நிலமைகளை அவதானித்த பின்னர் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் தமிழ் முறைப்பாட்டு பிரிவுற்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரட்ண விஜயமுனி தலைமையிலான குழுவினர் வீட்டு மதில் ஊடாக உள்நுழைந்து இயலாத நிலையில் தள்ளாடியவாறு இருந்த மூதாட்டியை மீட்டனர்.

அவரது உடல்நிலை மோசமடைந்திருந்தமையால் பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மீட்கப்பட்டவர் 60 வயது மதிக்கத்தக்க இ. செல்வநாயகி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது கணவன் மற்றும் மகன் ஆகியோர் இவரை கடந்த 8 நாட்களாக தனிமையில் வீட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-