News Update :

Sunday, December 11, 2016

TamilLetter

ஒற்றையாட்சியை ஏற்க முடியாது! - கூட்டமைப்பு எம்.பிக்கள் ரணிலிடம் தெரிவிப்பு




தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி தீர்வாக அமையாது. ஒற்றையாட்சியை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்பதே தமிழர்களின் நிலைப்பாடு. அதற்கு அமைவாகவே புதிய அரசியல் சாசனம் தயாரிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணிலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றபோது, பிரதமரிடம் கூட்டமைப்பினர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்படுதல் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவற்றிற்கு பதிலளித்த பிரதமர், இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருப்பதாகவும் சகல தர்ப்பினரதும் கருத்துக்களை பெற்று ஒருமித்த தீர்வை எட்டுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல முதலீட்டு திட்டங்களை உருவாக்க முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், இதன்போது வடக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார்.

இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-