News Update :

Saturday, December 17, 2016

TamilLetter

அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக அட்டாளைச்சேனை மக்கள் போர்க் கொடி - ஸ்தாபக செயலாளர் சட்டத்தரனி எஸ்.எம்.ஏ.கபூர்



கட்சியின் செயலாளர் ஹஸனலி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனது அதிகாரங்களை இரகசியமான முறையில் தலைவர் திட்டமிட்டு பறித்தெடுத்துள்ளார் என கூக்குரலிட்டு ஓப்பாரி வைத்து அழுது புலம்பி நியாயம் கேட்டார்; ஹஸனலி

அத்தோடு அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட வேண்டிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு தேவையில்லை என்றும் அது அட்டாளைச்சேனைக்கே வழங்க வேண்டுமென்றும் தான் இந்த சமூகத்தின் தியாகி என்றும் பத்திரிகையிலும்,கூட்டங்களிலும் கருத்து தெரிவித்து மக்களை நம்ப வைத்தார். 

ஹஸனலியின் கண்ணிர் கதையைக் கேட்ட உயர்பீட உறுப்பினர்கள் சகல அதிகாரங்கள் கொண்ட செயலாளர் பதவியை ஹஸனலிக்கு   உடன் வழங்க வெண்டுமென்று கட்சியின் தலைவருக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தனர்.

கட்சிக்குள் செயலாளர் பிரச்சினையை உறுவாக்கி அதனுடாக தேசியப்பட்டியலை அடைந்து கொள்வதே ஹஸனலியின் இலக்காக இருந்ததை அப்போது கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் விளங்கிக் கொள்ளாத போதிலும் ஹஸனலியின் திட்டத்திற்கு மறுமுனையில் ஆதரவு வழங்கியவர்கள் கட்சிக்கு எதிரான மாற்று அரசியல்வாதிகள்.

இதை புரிந்து கொள்ளாத தலைவரும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் சிலரும்; ஹஸனலியின்  சதி; வலைக்குள் சிக்குண்டு ஹஸனலியின் நிகழ்ச்சி நிரலுக்குள் மாட்டிக் கொண்டு விட்டனர்.

அட்டாளைச்சேனைக்கு ஒவ்வொறு முறையும் தலைவர் வரும் போது தேசியப்பட்டியல் வழங்குவதாக வாக்குறுதியளித்து வந்து வேளையில கடைசியாக நடந்த தேர்தலில் அட்டாளைச்சேனை ஜீம்மா பெரிய பள்ளிவாசளிலும் வைத்து சத்தியம் செய்தார்.

முஸ்லிம் சமூகத்தின் தலைவர் பள்ளிவாசலுக்குள் வைத்து சத்தியம் செய்து விட்டு இன்று தனது சுயநலத்திற்காக அல்லாஹூவின் வீட்டில் வைத்து செய்த சத்தியத்தை இன்று மீற முற்படுவது இந்த சமூகத்தின் சாபக்கேடாகவே நான் கருதுகின்றேன்;.

அட்டாhளைச்சேனை மக்களை தொடர்ச்சியாக பொய் வாக்குறுதி.சத்தியம் என பலமுறை நம்ப வைத்து கழுத்தறுத்த தலைவரை முஸ்லிம் சமூகமும்,இந்த நாடும் ஏளனமாகவே பார்க்க தொடங்கி விட்டனர்.

ஆகவே நாங்கள் இன்னும் தலைவரை நம்புகின்றோம் அவர் வாக்குறுதியளித்தது போல் அட்டாளைச்சேனைக்குறிய எம்.பி பதவியை  உடன் வழங்க வேண்டும்; தவறும் பட்சத்தில் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் செயலாளர் எஸ்.எம்.ஏ.கபூர் எச்சரித்தார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-