News Update :

Friday, December 9, 2016

TamilLetter

அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் வருகைக்கு எதிராக பொலிஸ் புகார்

  


எதிர்வரும்  டிசம்பர் 15-ஆம் தேதி  அம்பாங்கில் அமைந்துள்ள இண்டர் கொண்டினென்டல்    விடுதியில் நடைபெறவிருக்கும்  இலங்கை உணவு மற்றும் கலாச்சார விழாவில் பங்கேற்க    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன மலேசியாவிற்கு வருகை புரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. 
மலேசியா இந்தியர் கல்வி உருமாற்றத் திட்டத்தின்  தலைவரான இளங்கோவன் அண்ணாமலை இப்புகாரை அளித்துள்ளார். 
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 
"கடந்த  2009- ஆம் ஆண்டு நிகழ்ந்த சிங்கள இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான இறுதிக்கட்ட போரில்   பல்லாயிரக்காண தமிழர்கள்  கொல்லப்பட்டதன் பின்னணியில் மகிந்த ராஜபக்சேவுடன் கூட்டு சதி புரிந்தவர் மைத்ரிபாலா சிறிசேன.  அவரை மலேசியா நாட்டிற்குள் வர அனுமதித்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.  
கடந்த செப்டம்பர் மாதம், இலங்கையின் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சே மலேசியாவிற்கு வருகைப் புரிந்த போது 600க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதோடு  அமைதிப் பேரணியும் நடத்தினோம்.   
மலேசிய இந்தியர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், இலங்கை முன்னாள் அதிபரையும், நடப்பு அதிபரையும் மலேசியா மீண்டும் மீண்டும் அழைப்பது, இந்நாட்டு இந்தியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, மைத்திரி பாலாவின் வருகைக்கு நாங்கள் முழு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். 
மலேசிய இந்தியர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அரசாங்கம் மைத்ரிபாலாவின் வருகையைத் தடை செய்ய வேண்டும்" என இளங்கோவன் அண்ணாமலை  தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-