News Update :

Sunday, December 18, 2016

TamilLetter

பொத்துவில் வாஸீத் வெறும் டம்மி? –அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு




ஏச்.எம். நுஸ்கி –பொத்துவில்


பொத்துவில் பிரதேசம் அரசியல் அநாதையாக்கப்பட்டு எந்தவித அபிவிருத்தியும் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சித் தலைமையை பாரமெடுத்து 16 வருடங்கள் கழிந்த நிலையில் எதை சாதித்துள்ளார் என பல கேள்விகள் தொடுக்கப்பட்ட போது அவரால் தன்னை நியாயப்படுத்த பல போராட்டங்களை செய்ய வேண்டி எற்பட்டது.

இருந்தும் அதிர்வின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ரவூப் ஹக்கிமுடைய அமைச்சின் மூலம் பொத்துவிலுக்கு என்ன அபிவிருத்தியை செய்துள்ளீர்கள் என கேட்ட போது நான் எல்லா பிரதேசங்களுக்கும் நிதி ஒதுக்கலாம் அப் பிரதேசத்திலுள்ள அரசியல் வாதிகள் பொடுபோக்காக இருப்பதனால் என்னால் அபிவிருத்தி செய்ய முடியாமல் போய்விட்டதகவும்,பொத்துவில் அமைப்பாளர் வாஸீத் பொத்துவில் அபிவிருத்தியில் அக்கறை கொள்ளாமல் வெறும் சீரோவாக காணப்படுகிறார்.

எனவே இப்படியானவர்கள் பொத்துவிலுக்கு தலைமை தாங்குவதால் எப்படி நான் எனது அமைச்சின் மூலம் பொத்துவில் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் எனும் தொனிப் பொருளில் பதிலளித்தாா்..

பொத்துவில் மக்களே இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் தகுதியற்ற வெறும் டம்மி ஆட்களை வைத்து நம் பிரதேசம் மற்ற பிரதேசங்களோடு எப்படி போட்டி போட முடியும் அத்தோடு நாம் இழந்த நிலங்களை எப்படி மீட்பது,நம் இளைஞர்களின் எதிர்காலத்தை எப்படி இவரின் கைகளில் கொடுப்பது மக்களே சிந்தியுங்கள்.

ஒரு கட்சியின் தலைவனே பகிரங்கமாக நமது அமைப்பாளர் வாஸீத்தை பற்றி அழகாக கூறியுள்ளார்.இதைவிட இவரின் திறமையை எப்படி நாம் அளவிடுவது.
இளைஞர்களே புறப்படுங்கள் பொத்துவிலின் தலையெழுத்தை மாற்றுவோம்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-