News Update :

Wednesday, December 14, 2016

TamilLetter

;பிரதியமைச்சர் பைஸல் காசீம்,மாகாண அமைச்சர் நஸீர்,மாகாண சபை உறுப்பினர்களான உதுமாலெப்பை,ஆரீப் சம்சுதீன் பொத்துவிலுக்கு ஆதரவு வழங்கப் போவது யார்




இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை(18ம் திகதி) நடைபெறவுள்ளது.
; நிந்தவூர்,அட்டாளைச்சேனை,பொத்துவில் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பொத்துவில் தொகுதியில் பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

எந்த பிரதேசத்தில் யார் போட்டியிட்டாலும் எந்த பிரதேசம் இம் முறை குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி சென்றடைய  வேண்டும் என்பதில் இளைஞர்களும்,சில அரசியல் தலைவர்களும் முடிவெடுக்க வேண்டும்

குறிப்பாக பொத்துவில் பிரதேசம் அம்பாரை மாவட்டத்தில் தனிமைப்பட்ட முஸ்லிம் பிரதேசமாக காணப்படுகின்றது.இந்த பிரதேசத்திலிருந்து சிறந்த ஆளுமைமிக்க ஒரு இளைஞன் போட்டியிடுகின்றான்.இந்த இளைஞனுக்கு போட்டியாக நிந்தவூர் பிரதேசத்திலிருந்தும் சில இளைஞர்கள் போட்டியிடுகின்றனர்.
போட்டி போடுவது தமது உரிமையாக இருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்ட எமது கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் முதல் முறையாக நமது ஆதரவை எதிர் பார்த்துள்ளான்.
நிந்தவூர் பிரதேசம் அரசியல் அதிகாரமுள்ள ஒரு பிரதேசம் பிரதியமைச்சர்,மாகாண சபை உறுப்பினர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் என ஏகப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட ஊர்.

நிந்தவூர் பிரதேசத்தில் போட்டியிட்ட பைஸல் காசீம்,ஹஸனலி,ஆரீப் சம்சுதீன் ஆகியோருக்கு எதுpவித எதிர் பார்ப்பும்; இல்லாமல் பொத்துவில் மண் வாக்களித்து வந்துள்ளது.ஆனால் பொத்துவில் மண்ணின் இருந்து ஒரு சாதாரண இளைஞர் இத் தேர்தலில் போட்டியிடும் போது ஏன் உங்களால் எமதூருக்கு வாக்களிக்க முடியாது.

எந்த அதிகாரம் என்றாலும் நிந்தவூருக்குத்தான் கிடைக்க வேண்டுமா?பொத்துவில் மட்டும் உங்களுக்கு வாக்ளிக்கும் இயந்திரமா நிந்தவூர் மக்களுக்கு மனச்சாட்சி இல்லையா என கேட்கிறோம்.

எனவே வாக்களிக்கயிருக்கும் இளைஞர்களே மற்றும் நிந்தவூர் பிரதேசத்தை தலைமை தாங்கும் அரசியல் தலைவர்களே நீங்கள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்

அட்டாளைச்சேனையின் சுகாதார அமைச்சர் நஸீர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பை அவர்களே இந்த விடயத்தில் ;யார்; எமது ஊருக்கு ஆதரவாக செயற்படப்; போகின்றீர்கள் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

காலம் பதில் சொல்லும்
பொத்துவில் எஸ்.நவாஸ்


;

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-