News Update :

Saturday, December 10, 2016

TamilLetter

முதன் முறையாக ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்ந்தார் சசிகலா



யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தனித்துவமான வாழ்க்கை வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவர் பயன் படுத்திய பொருட்கள் கூட மதிப்புமிக்கவையாக இருந்தது. முதல்வர் மட்டும் அமரும் நாற்காலியில் இன்று முதன் முதலாக சசிகலா அமர்ந்து விஐபிக்களை சந்தித்தார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்.22 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிச.5 அன்று மரணமடைந்தார். அதன் பின்னர் அதிமுகவுக்குள் பல மாற்றங்கள் நடந்துள்ளன.
முதலமைச்சராக ஓபிஎஸ்சும் , ஏனைய அமைச்சர்கள் அப்படியே தொடர்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா வரவேண்டுமென்று கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் ஒரு மனதாக வேண்டுகோள் வைத்துள்ளனர்.
முதலமைச்சர் ஓபிஎஸ்சும் சசிகலா வர ஆதரவு கொடுத்துள்ளார். ஜெயலலிதா இருந்தவரை நிகழ்ந்த விஷயங்கள் எல்லாம் தலைகீழாக சென்றுகொண்டிருக்கிறது.
போயஸ் இல்லத்தில் சசிகலா மற்றும் அனைத்து சொந்தங்களும் வசிக்க வந்துள்ளனர். சசிகலாவை இன்று தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணிய ஆதித்தன் சென்று சந்தித்தார். அப்போது அவரை வரவேற்று பேசிய சசிகலா முதன் முறையாக ஜெயலலிதா அமரும் நாற்காலியில் அமர்ந்து அவரை சந்தித்தார்.
பொதுவாக ஜெயலலிதா விஐபிக்களை அந்த அறையில் ஒரு குறிப்பிட்ட நாற்காலியில் அமர்ந்துதான் சந்திப்பார். பிரதமர் மோடி வந்த போது மட்டுமே நாற்காலி மாற்றப்பட்டது.
ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் அமர்ந்ததன் மூலம் ஜெயலலிதா இடத்திற்கு முன்னேறினார் சசிகலா என்பதையே இது காட்டுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-