News Update :

Wednesday, December 7, 2016

TamilLetter

ஜப்பானின் 'பியர்ல் ஹார்பர்' தாக்குதல்




- இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் துறைமுகம் மீதான ஜப்பானிய இராணுவத்தின் தாக்குதல் நடந்து 75 ஆண்டுகள் நேற்றுடன் பூர்த்தி அடைந்த நிலையில், அந்தத் தாக்குதலில் மாண்ட 2,400 அமெரிக்கர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்கள், மற்றும் 300க்கும் மேற்பட்ட போர்விமானங்கள் சேதமடைந்தன. இந்த பியர்ல் ஹார்பர் மீதான திடீர்த் தாக்குதலை 350 ஜப்பானிய போர்விமானங்கள் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலில் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, பதிலடி கொடுக்கத் தொடங்கி, இராண்டாம் உலகப் போர் ஆரம்பமாகி, ஹிரோஷிமா, நாகசா கியில் அணுகுண்டு வீசப்பட்டதோடு ஒரு முடிவுக்கு வந்தது.
அமெர்க்கர்கள் இந்த பியர்ல் ஹார்பர் தாக்குதல் 75 ஆன்டுகள் நிறைவை எட்டியுள்ள தருணத்தில், இம்மாத இறுதிவாக்கில் அமெரிக்கா வரவிருக்கும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, அரிஷோனாவிலுள்ள பியர்ல் ஹார்பர் நினைவகத்திற்கு வருகை புரிவார் எனக் கூறப்பட்டது.
தம்முடைய இந்த வருகையின் போது பியர்ல் ஹார்பர் தாக்குதலை நடத்தியதற்காக பிரதமர் அபே மன்னிப்புக் கேட்டுக்கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், அவர் அப்படிச் செய்ய மாட்டார் என்று ஜப்பானிய வட்டார தகவல்கள் கூறுகின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-